நடிகர் விஜய்யையும் அவரது குட்டி ரசிகர்களான குழந்தைகளையும் பிரிக்கவே முடியாது. விஜய் நடிக்கும் படங்கள் எவ்வளவு தான் ஆக்ஷன் படமாக இருந்தாலும், அதில் குழந்தைகளை கவரும் விஷயங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
குறிப்பாக விஜய் படங்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுவார்கள். ஆண்டுகள் உருண்டோடினாலும், அவர்கள் எப்போதும் மக்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்திருப்பார்கள். அந்த வகையில் விஜய்யுடன் நடித்த ஒரு குழந்தை நட்சத்திரத்தின் இப்போதைய படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நிவேதிதா
2007-ம் ஆண்டு விஜய்யின் ’அழகிய தமிழ்மகன்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் விஜய்யின் பக்கத்துவீட்டு குழந்தையாக ரேணு என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் நிவேதிதா நடித்திருந்தார். அபுதாபியைச் சேர்ந்த இவர் மோகன்லால், ஜெயராம், திலீப் உள்ளிட்டோரின் மலையாளப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இருப்பினும் நிவேதிதா நடித்த ஒரே தமிழ் படம் ‘அழகிய தமிழ் மகன்’ மட்டும் தான்.
2000-ம் ஆண்டு பிப்ரவரியில் பிறந்த நிவேதிதாவுக்கு நிரஞ்சனா என்ற அக்காவும் இருக்கிறார். அவரும் நடிகை தான். 2009-ம் ஆண்டுக்குப் பிறகு படங்களில் நடிக்காத நிவேதிதா கேரள மாநில விருது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விருதுகளை தனது குழந்தை நடிப்புக்காகப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தற்போது நிவேதிதாவின் படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்