Home /News /entertainment /

‘பொன்னியின் செல்வன் படம் உருவாகுவதற்கு பாகுபலிதான் முக்கிய காரணம்’ - மணிரத்னம்

‘பொன்னியின் செல்வன் படம் உருவாகுவதற்கு பாகுபலிதான் முக்கிய காரணம்’ - மணிரத்னம்

பிரபாஸ் - விக்ரம்

பிரபாஸ் - விக்ரம்

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொன்னியின் செல்வன் படம் உருவாக பாகுபலி முக்கிய காரணமாக அமைந்தது என்று இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார். இதற்காக பாகுபலி இயக்குனர் ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்துள்ளார் மணிரத்னம்.

    இந்திய சினிமா வரலாற்றில் பாகுபலி திரைப்படம் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தின் முதல் பாகம் 2015-ம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 2017-ம் ஆண்டிலும் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

    அதற்கு முன்பு இது போன்ற காட்சி அமைப்புகளை படத்தில் ஏற்படுத்த முடியுமா என, யாரும் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு ராஜமவுலி இந்த படைப்பை உருவாக்கி இருப்பார். இந்நிலையில் பாகுபலியைப் போன்று பொன்னியின் செல்வன் திரைப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.



    ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை வெளியிடும் விஜய் பட தயாரிப்பாளர்!

    பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    பொன்னின் செல்வன் படத்திலிருந்து டீசர் மற்றும் முதல் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்திலிருந்து இரண்டாம் பாடலாக சோழா சோழா என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டது.

    பாராட்டுக்களை வாரி குவித்த ‘ஐங்கரன்’ திரைப்படம் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பு!

    இதையொட்டி ஐதராபாத்தில் பாடல் வெளியீட்டு விழா விமரிசையாக நடத்தப்பட்டது. இதில் இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    விழாவில் பேசிய மணிரத்னம், ‘வரலாற்று படங்களை மிகச் சிறப்பாக எடுக்க முடியும் என்பதை பாகுபலி மூலம் இயக்குனர் ராஜமவுலி நிரூபித்து காட்டினார்.  பாகுபலியின் 2 பாகங்களும் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. இது எங்களுக்கு வரலாற்று படத்தை சிறப்பாக எடுக்க முடியும் என்ற நம்பிக்கையையும், ஐடியாவையும் கொடுத்தது. இதற்காக ராஜமவுலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    அந்த வகையில் பொன்னியின் செல்வன் படம் உருவாகுவதற்கு பாகுபலி முக்கிய காரணம். இந்த படத்தை தெலுங்கில் வெளியிடும் தில் ராஜுவுக்கும் நன்றி.’ என்று பேசினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Mani rathnam, Ponniyin selvan

    அடுத்த செய்தி