ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸில் கமல்ஹாசனை அவமதித்தாரா அசீம்? வைரலாகும் வீடியோ - ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸில் கமல்ஹாசனை அவமதித்தாரா அசீம்? வைரலாகும் வீடியோ - ரசிகர்கள் அதிர்ச்சி

அசீம் - கமல்ஹாசன்

அசீம் - கமல்ஹாசன்

போட்டியாளர்களிடையே பேசிய அசீம், இங்க எல்லாம் அவங்க, அவங்க பலத்தை வைத்து சேஃபா கூட்டணி வச்சுகிறாங்க என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த சீசன்களை விட இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு ஆதரவு குறைவாகவே இருந்துவருகிறது. நடிகர் கமல்ஹாசன் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவரது பேச்சைக் கேட்பதற்காக மட்டுமே பிக்பாஸ் பார்ப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். காரணம் இந்த சீசன் போட்டியாளர்களின் சுவாரசியம் குறைவான பங்களிப்பே காரணம் என்று கூறப்படுகிறது.

முதல் சில வாரங்கள் ஜி.பி.முத்துவினால் பிக்பாஸ் நிகழ்ச்சியை மக்கள் ஆர்வமாக பார்த்தனர். ஆனால் அவர் பாதியில் வெளியேற அந்த நிகழ்ச்சிக்கான ஆர்வம் பார்வையாளர்களிடையே வெகுவாக குறைந்தது. இந்த சீசனில் அசீம் மற்றும் விக்ரமன் ஆகியோர் மட்டுமே அவர்கள் பேசும் கருத்துகளுக்காக பரபரப்பாக பேசப்படுகின்றனர். பல நேரங்களில் அசீம் தவறான கருத்துக்களை வெளியிடவும், அவரை கமல்ஹாசன் கண்டிப்பதும் தொடர்கதையாகிவிட்டது. உங்கள் குழந்தை இந்த நிகழ்ச்சியை பார்ப்பார் என அசீமுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கிய பிறகும் அவர் மாறவில்லை.

மற்றொருபக்கம் யார் மோசமான வார்த்தைகளையோ கருத்துக்களையோ வெளியிட்டால் முதலில் கண்டிக்கும் நபராக விக்ரமன் இருக்கிறார். இதற்காக அவரை கமல்ஹாசன் அடிக்கடி பாராட்டிவருகிறார். இந்த நிலையில் சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் விக்ரமனை பார்த்து நீங்கள் இந்த வீட்டில் தொடர்கிறீர்கள் என கமல்ஹாசன் சொல்கிறார். அப்போது அங்கே இருக்கும் அசீம் தனக்கு கமல்ஹாசன் சொன்னது பிடிக்காதது போன்ற ரியாக்சனுடன் எழுந்து செல்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பலரும் மிகப்பெரிய கலைஞன் கமல்ஹாசனை, அசீம் அவமானப்படுத்திவிட்டதாக கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் வெற்றிபெறும் போட்டியாளர் நேரடியாக இறுதி வாரத்திற்கு அனுப்பப்படுவார்கள். இதற்காக வீட்டில் உள்ள 8 ஹவுஸ்மேட்களும் போட்டியிடுகின்றனர். அதற்கு அசீம், ரச்சிதா - ஷிவின் கூட்டணியை உடைக்க வேண்டும் என்று கூறுகிறார். தொடர்ந்து போட்டியாளர்களிடையே பேசிய அசீம், இங்க எல்லாம் அவங்க அவங்க பலத்தை வைத்து சேஃபா கூட்டணி வச்சுகிறாங்க என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

First published: