Home /News /entertainment /

68th Film National Awards | 4 தேசிய விருதுகளை அள்ளிய ‘ஐயப்பனும் கோஷியும்’!

68th Film National Awards | 4 தேசிய விருதுகளை அள்ளிய ‘ஐயப்பனும் கோஷியும்’!

ஐயப்பனும் கோஷியும் கலைஞர்கள்.

ஐயப்பனும் கோஷியும் கலைஞர்கள்.

National Awards: இப்படத்தின் இயக்குநரான சச்சிதானந்தன் இப்படம் வெற்றிகரமாக பெரும் வரவேற்பைப் பெற்றுப் பார்க்கப்பட்டிருந்த நேரத்திலேயே கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி உயிரிழந்தார்.

    தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் மலையாளப் படங்களில் ஒன்றான ஐய்யப்பனும் கோஷியும் (Ayyapanum Koshiyum) திரைப்படம் 4 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

    பிரித்வி ராஜ், பிஜு மேனன் உள்ளிட்டோர் நடித்து சச்சிதானந்தனால் இயக்கப்பட்ட ஐய்யப்பனும் கோஷியும் மலையாளத்தில் ஹிட் அடித்ததோடு மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களிடமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

    அமேசான் பிரைமில் வெளி வந்த இப்படத்தை பெரும்பாலான தமிழ் ரசிகர்கள் கண்டு களித்தனர். அப்பாடலில் இடம்பெற்ற ‘கலகாத்தா’ பாடலும் மிகப் பெரிய வெற்றியடைந்தது.

    இந்நிலையில் 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஸ்டண்ட் அமைப்பு, சிறந்த பின்னணி பாடகி உள்ளிட்ட விருதுகளை அப்படம் வென்றுள்ளது.

    அப்படத்தின் இயக்குநர் கே ஆர் சச்சிதானந்தன், ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராஜசேகர், மாபியா சசி மற்றும் சுப்ரீம் சுந்தர், நடிகர் பிஜு மேனன், கலகாத்தா பாடல் பாடிய நஞ்சம்மா உள்ளிட்டோர் விருதுகளை வென்றுள்ளனர்.

    இப்படத்தின் இயக்குநரான சச்சிதானந்தன் இப்படம் வெற்றிகரமாக பெரும் வரவேற்பைப் பெற்றுப் பார்க்கப்பட்டிருந்த நேரத்திலேயே கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி உயிரிழந்தார். தற்போது அவருக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Kerala, Malayalam actor, National Film Awards

    அடுத்த செய்தி