முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தமிழில் தொடர்ந்து ரீமேக்காகும் ஆயுஷ்மான் குரானா படங்கள்!

தமிழில் தொடர்ந்து ரீமேக்காகும் ஆயுஷ்மான் குரானா படங்கள்!

ஆயுஷ்மான் குரானா

ஆயுஷ்மான் குரானா

ஆயுஷ்மான் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த இந்தி திரைப்படங்கள், தற்போது தமிழில் தொடர்ந்து ரீமேக் செய்யப்படுகின்றன. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த  திரைப்படங்கள் தற்போது தமிழில் தொடர்ந்து ரீமேக் செய்யப்படுகின்றன. 

பாலிவுட் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் ஆயுஷ்மான் குரானா.  தமிழில் அஜித், விஜய் சேதுபதி,  சிவகார்த்திகேயனை போல, பாலிவுட்டில் திரைப்பட பின்னணி எதுவும் இல்லாமல் தன் முயற்சியாலும்,  திறமையாலும் திரைத்துறையில் நுழைந்து வெற்றியடைந்துள்ளார். குறிப்பாக நெப்போடிசம் ஆதிக்கம் செலுத்துவதாக சொல்லப்படும் பாலிவுட்டில்,  ஆயுஷ்மான் குரானா வெற்றி பலராலும் பாராட்டப்பட்டது.

கதைகளில் புதுமை மற்றும் வித்தியாசம் என தன்னுடைய களத்தை கட்டமைத்துக் கொண்டதால், ஆயுஷ்மான் குரானாவை தொடர் வெற்றிகள் வசப்படுத்திக்கொண்டன. இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றியடைந்துள்ளன.  அதில் தற்போது சில திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வருகின்றன.

தமிழில் வெளியானது ரன்பீர் கபூர் பட ட்ரெய்லர் 'பிரம்மாஸ்திரம்'!

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த விக்கி டோனர் என்ற திரைப்படத்தை தமிழில் தாராள பிரபு என்ற பெயரில் ரீமேக் செய்தனர். 2020ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான அந்த  திரைப்படம் தமிழிலும் வரவேற்பு பெற்றது.  ஆனால் அந்த படம் வெளியாகி அடுத்த வாரமே கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் அதிக நாட்கள் திரையிட முடியாமல் போனது. இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்த நடிகை தீபிகா படுகோனே?

இதையடுத்து ஆர்டிகல் 15 என்ற திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்தனர்.  நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படமும் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியில் வெற்றியடைந்தது.  குறிப்பாக, அந்த திரைப்படத்தின் வசனமும்,  கதைக்களமும் பலரால் பாராட்டப்பட்டது.இந்தப் படங்களைப் போல ஆயுஷ்மான் குரானா சிறந்த நடிப்பிற்கு தேசிய விருது வென்ற அந்தாதுன் திரைப்படத்தையும் தமிழில் ரீமேக் செய்கின்றனர். பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கும் அந்த படத்திற்கான வேலைகள் 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கின. அந்தகன் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்தாதுன் ரீமேக் படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆயுஷ்மான் குரானா படங்கள் தொடர்ந்து ரீமிக்ஸ் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு அவரின் Badhooi Ho திரைப்படத்தையும் தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தனர். என்.ஜே சரவணன் என்பவருடன் ஆர்.ஜே.பாலாஜி இணைந்து இயக்கி நடித்துள்ள அந்த திரைப்படம் நாளை தமிழகத்தில் வெளியாகிறது. அந்தப் படத்திற்கு வீட்ல விசேஷம் என தலைப்பு வைத்துள்ளனர்.

ரயில்வே துறையில் பணிபுரியும் நாயகனின் தந்தை,  ஓய்வுபெறும் வயதில் ஒரு குழந்தைக்கு தந்தையாகிறார்.  அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடன், சில கேள்விகளுக்கான பதில்களையும் பதாய் ஹோ திரைப்படத்தில் கூறியிருந்தனர்.

அந்தப்படத்தின் சாராம்சத்தை மாற்றாமல் தமிழில் அப்படியே ரீமேக் செய்து நடித்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி. இந்தியை போல தமிழகத்திலும்  வீட்டில் விசேஷம் படம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற மொழி திரைப்படங்கள் தமிழகத்தில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். ஆனால் ஆயுஷ்மான் குரானா போன்ற குறிப்பிட்ட சில நடிகர்களின் படங்கள் தற்போது தொடர்ந்து ரீமேக் செய்யப்படுவது பலராலும் பாராட்டப்படுகிறது.  அதற்கு காரணம் ஆயுஷ்மான் கதை தேர்வு முறையே என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bollywood, Kollywood, RJ Balaji