ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஷாருக்கானை உயிருடன் எரித்துவிடுவேன்... அயோத்தி சாமியார் மிரட்டல்

ஷாருக்கானை உயிருடன் எரித்துவிடுவேன்... அயோத்தி சாமியார் மிரட்டல்

ஷாருக்கான் - அயோத்தி சாமியார்

ஷாருக்கான் - அயோத்தி சாமியார்

பதான் படத்தை தியேட்டர்களில் வெளியிட்டால் தீ வைத்து கொளுத்துவேன். அந்தப் படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஷாருக்கானை உயிருடன் எரிக்க வேண்டும் என அயோத்தி சாமியார் சொன்னது சர்ச்சையாகியிருக்கிறது.

ஷாருக்கானின் அடுத்த படமான ‘பதான்’ திரைப்படம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வருவது போல தெரியவில்லை. அத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பேஷாரம் ரங்' பாடலுக்கு அரசியல்வாதிகள் மற்றும் வலதுசாரி அமைப்புகளின் எதிர்ப்புக்கு மத்தியில், அயோத்தியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் ஷாருக்கான் பற்றி குறிப்பிட்டது அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

தபஸ்வி சாவ்னியைச் சேர்ந்த துறவி எனக் கூறப்படும் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா என்ற சாமியார், ஷாருக்கானை நேரில் பார்த்தால், உயிருடன் எரிக்கும் அளவிற்குச் செல்வேன் என்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். 'பேஷரம் ரங்' பாடலில் காவி நிறம் அவமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"எங்கள் சனாதன தர்மத்தை சேர்ந்தவர்கள் இது தொடர்பாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று ஷாருக்கானின் போஸ்டரை எரித்துள்ளோம். ஜிகாதி ஷாருக்கானை நான் சந்திக்க நேர்ந்தால், அவரை உயிருடன் எரித்து விடுவேன்" என்று அந்த சாமியார் கூறினார்.

150 கோடி சம்பளம்... விஜய்யின் தளபதி 68 படத்தின் ஹாட் அப்டேட்!

அதோடு நிறுத்தாத ஆச்சார்யா, பதான் படத்தை தியேட்டர்களில் வெளியிட்டால் தீ வைத்து கொளுத்துவேன். அந்தப் படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக, ஹனுமன்கர்ஹியின் ராஜு தாஸும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Shah rukh khan