கடந்த 2015-ம் ஆண்டு இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த படம் ‘இன்று நேற்று நாளை'. இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் கருணாகரன், ஜெயப்பிரகாஷ், ரவி ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் – ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.
முதல் படமே அறிவியல் புனைவு படமாக எடுத்து அதில் வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குநர் ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இயக்குநர் ரவிக்குமாரின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமாகியுள்ளார். அவரது மறைவு குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
என் நண்பர் & இயக்குனர் ரவிக்குமார் அவர்களின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்.. என் ஆழ்ந்த இரங்கல்கள்.
RIP pic.twitter.com/Nz2CSPXxo8
ரவிக்குமாரின் தாயார் மரணத்தை அவரது நண்பரும் இயக்குநருமான கௌரவ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து திரையுலகினர் பலரும் இயக்குநர் ரவிக்குமாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.