Home /News /entertainment /

ஆம்ஸ்டர்டாம் பட விழாவில் இளையராஜாவுக்கு விருது... உலக அங்கீகாரம் பெறும் இசைஞானியின் ஆங்கில படம்!

ஆம்ஸ்டர்டாம் பட விழாவில் இளையராஜாவுக்கு விருது... உலக அங்கீகாரம் பெறும் இசைஞானியின் ஆங்கில படம்!

இந்த காதல் ப்ளஸ் ஹாரர் கலந்த கதைக்காக இளையராஜா 30 ஒரிஜினல் பேக்ரவுண்ட் ஸ்கோர் மியூசிக்கை கம்போஸ் செய்துள்ளார்.

இந்த காதல் ப்ளஸ் ஹாரர் கலந்த கதைக்காக இளையராஜா 30 ஒரிஜினல் பேக்ரவுண்ட் ஸ்கோர் மியூசிக்கை கம்போஸ் செய்துள்ளார்.

இந்த காதல் ப்ளஸ் ஹாரர் கலந்த கதைக்காக இளையராஜா 30 ஒரிஜினல் பேக்ரவுண்ட் ஸ்கோர் மியூசிக்கை கம்போஸ் செய்துள்ளார்.

    ஆம்ஸ்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது இளையராஜவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழில் மட்டுமல்ல இந்திய இசையுலகமே வியந்து போற்றக்கூடியவர் இசைஞானி ‘இளையராஜா’. இசையுலக வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு இசையமைப்பாளருக்கு டாப் ஸ்டார் படத்தில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது என்றால் அது இளையராஜாவாக தான் இருக்கும். 'முரட்டு காளை' பட வெளியீட்டின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இணையாக இளையராஜாவிற்கு ரசிகர்கள் கட் அவுட் வைத்து கொண்டாடினர். தலைமுறைகளைக் கடந்தும், இளையராஜா இன்றும் இளம் தலைமுறையினர் விரும்பும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார்.

    ‘நேற்று இல்லை, நாளை இல்லை எப்பவும் நான் ராஜா’ என்ற அவர் இசையமைத்த பாடல் வரிகளைப் போல், 78 வயதிலும் தனது இசைக்காக சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று அசத்தியுள்ளார். இசைஞானி இளையராஜா சமீபத்தில் இசையமைத்த ஆங்கிலம் படத்திற்கு சிறந்த இசைக்கான சர்வதேச விருது கிடைத்துள்ளது.

    முதல் முறையாக இந்திய படத்திற்கு டப்பிங் பேசிய மைக் டைசன்


    இங்கிலாந்தைச் சேர்ந்த 5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ’எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ என்ற இந்தோ - ஆங்கில படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது. இந்த படத்தை கன்னட பட இயக்குநர் அஜித் வாசன் உஜ்ஜினா என்பவர் இயக்கியுள்ளார். கே.குணசேகரன் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

    ’எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’படத்தில் கிரிஷ் நாயகனாகவும், மாட்டில்டா நாயகியாகவு நடித்துள்ளனர். இந்தியா வரும் வெளிநாட்டு காதல் ஜோடி, இங்கு சில காலம் வாழ்ந்த பின்னர் பிரிய முடிவெடுக்கின்றனர். எதிர்பாராதவிதமாக அந்த வீட்டை ஆக்கிரமித்துள்ள பேய்களுடன் அவர்களுக்கு தொடர்பு கிடைத்து, பேச ஆரம்பிக்கின்றனர். அதன் பின்னர் இருவரும் ஒன்றாக வாழ முடிவெடுப்பது தான் ’எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் கதையாகும்.



    இந்த காதல் ப்ளஸ் ஹாரர் கலந்த கதைக்காக இளையராஜா 30 ஒரிஜினல் பேக்ரவுண்ட் ஸ்கோர் மியூசிக்கை கம்போஸ் செய்துள்ளார். அதற்கு தற்போது ஆம்ஸ்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் (AIFF) அங்கீகாரம் கிடைத்துள்ளது. ’எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’படத்திற்கு இசையமைத்ததற்காக இளையராஜாவிற்கு சிறந்த இசைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது இளையராஜா இசையமைக்கும் 1,422வது படமாகும்.

    நெட்பிளிக்ஸ் தயாரிப்பாளர் சர் மார்கோ ராபின்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எங்கள் படத்திற்கு சிறந்த இசைக்கான விருதை வென்றுள்ளோம். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இது நம்பமுடியாத அழகான இசை’ என பதிவிட்டுள்ளார்.

    இசைஞானி இளையராஜா இசையமைத்த ஆங்கில படத்திற்கு சர்வதேச அளவில் விருது கிடைத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து சோசியல் மீடியாவில் இசையுலகினர், திரையுலகினர், ரசிகர்கள் பட்டாளம் என பலதரப்பினரும் இளையராஜாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Illayaraja

    அடுத்த செய்தி