Home /News /entertainment /

’மனிதன் மனிதன்' பாடல் டைட்டிலில் இடம்பெற்றது ரஜினி சாரால் தான் - ஏவிஎம் அருணா குகன்!

’மனிதன் மனிதன்' பாடல் டைட்டிலில் இடம்பெற்றது ரஜினி சாரால் தான் - ஏவிஎம் அருணா குகன்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

இந்த பாடலுக்கு தானே லிப் சிங்க் செய்ய விரும்புவதாக ரஜினி சார் கூறியதால், கடைசியாக அதை டைட்டில் பாடலாக மாற்றினார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மனிதன் படத்தில் வரும் மனிதன் மனிதன் பாடலை டைட்டில் பாடலாக ரஜினிகாந்த் மாற்றிய சுவாரஸ்யத்தை ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருணா குகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

    இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த மனிதன் திரைப்படம் 1987-ல் வெளியானது. ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்தில் ரூபிணி, ரகுவரன், ஸ்ரீவித்யா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்திருந்த மனிதன் படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.

    இதில் மலேசியா வாசுதேவன் குரலில் ஒலிக்கும் மனிதன் மனிதன் என்ற பாடல் டைட்டில் பாடலாக இடம்பெற்றிருந்தது. அதற்குக் காரணம் ரஜினிகாந்த் தான் என்ற சுவாரஸ்யத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஏவிஎம் தயாரிப்பாளர் அருணா குகன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    யாத்ரா தனுஷ் ஸ்போர்ட்ஸ் கேப்டன்... துணை கேப்டன் எந்த நடிகரின் மகள் தெரியுமா?

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “’மனிதன் மனிதன்’ பாடல் எப்படி டைட்டில் பாடலாக மாறியது? ஒரு நாள் ரஜினி சார் எங்கள் ஸ்டுடியோவில் உள்ள அறை ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது “மனிதன்... மனிதன்” பாடல், ஆடியோ கேசட்டுக்காக அருகிலிருந்த எஸ்.பி.முத்துராமன் சார் அறையில் தயாராகி வந்துள்ளது. இதை ரஜினி சார் கேட்டிருக்கிறார்.

    வெளியே வந்ததும் பாடலைப் பாராட்டியிருக்கிறார். ஆனால், தகுந்த காட்சி கிடைக்காததால் படத்தில் அந்தப் பாடலை சேர்க்கவில்லை என்று எஸ்.பி.எம் சார், ரஜினி சாரிடம் விளக்கியுள்ளார். உடனே ரஜினி சார், “என்ன சார் இது? இவ்வளவு அழகான வரிகள் கொண்ட பாடலை எப்படி தவறவிடுவது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.



    பின்னர் தாத்தாவும் எஸ்.பி.எம் சாரும் ரஜினி சாருடன் உடன்பட்டு பாடலை படத்தில் சேர்க்க முடிவு செய்தனர். இந்த பாடலுக்கு தானே லிப் சிங்க் செய்ய விரும்புவதாக ரஜினி சார் கூறியதால், கடைசியாக அதை டைட்டில் பாடலாக மாற்றினார்கள்” என்ற சுவாரஸ்ய விஷயத்தைக் கூறியுள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி