ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினி காஸ்ட்யூமை அடியாள் கதாபாத்திரத்துக்கு தந்த ஏவிஎம்

ரஜினி காஸ்ட்யூமை அடியாள் கதாபாத்திரத்துக்கு தந்த ஏவிஎம்

ரஜினி

ரஜினி

சிவாஜியில் வரும் வாஜி வாஜி சிவாஜி பாடலில் ரஜினி அணிந்திருந்த காஸ்ட்யூமை, ஏவிஎம்மின் காஸ்ட்யூம் குளோசட்டிலிருப்பதை ஏவிஎம் சரவணனின் பேத்தி அருணா குகன் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஏவிஎம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தயாரிப்பு நிறுவனம். ஏவி மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தமிழ் மட்டுமின்றி இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படங்களை தயாரித்தது.

கமல் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களை, எண்ணற்ற இயக்குநர்களை, தொழில்நட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தியது. தமிழ் சினிமா வர்த்தகத்தை விரிவுப்படுத்தியதில் ஏவிஎம் நிறுவனத்தின் பங்கு மிகப்பெரியது.

சினிமா தயாரிப்பில் ஓர் ஒழுங்கை கடைபிடித்ததுடன், மற்றவர்களுக்கு ஒழுங்கை கற்றுத் தந்த நிறுவனம் ஏவிஎம். படப்பிடிப்பு தொடங்கும் போதே அதன் வெளியீட்டு தேதியை அறிவிப்பது இவர்களின் ஸ்பெஷல். அந்தளவு துல்லியமாக திட்டமிட்டு இயங்கக் கூடியவர்கள்.

சினிமா தயாரிப்பும், அதன் வெளியீடும் வர்த்தகத்திலிருந்து இறங்கி சூதாட்டமாக மாறிய பின் படத்தயாரிப்பிலிருந்து ஏவிஎம் விலகியது. அவர்கள் கடைசியாக தயாரித்த படம் ரஜினி நடித்த சிவாஜி.

ஏவிஎம் ஒரு படத்தை தயாரிக்கிறது என்றால் அதன் பட்ஜெட்டை இயக்குநர் முதலிலேயே தந்துவிட வேண்டும். சிவாஜியில் அந்த விதி மீறப்பட்டது. ஷங்கர் எப்போதுமே சொன்ன பட்ஜெட்டைவிட அதிகம் செலவழிக்கிறவர். அதனால், தங்களின் தலையாய கொள்கையில் ஒன்றை ரஜினிக்காகவும், ஷங்கருக்காகவும் விட்டுத் தந்தனர்.

ஷங்கர் ஒரு படத்தைத் தொடங்கினால் எப்போது முடியும் என்று அவராலும் கூற முடியாது. திட்டமிட்டதைவிட அதிக நாள்கள் எடுத்தே பழகியவர் அவர். அதனால், ஏவிஎம் தங்களின் இன்னொரு கொள்கையான, படம் ஆரம்பிக்கும் போதே வெளியீட்டு தேதியை அறிவிப்பது என்பதையும் சிவாஜிக்காக சமரசம் செய்தது.

Varisu : விஜய்யின் வாரிசு பட டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா? வைரலாகும் புதிய தகவல்

சொல்ல வந்தது சிவாஜி சம்ந்தப்பட்டது எனினும் விஷயம் இதுவல்ல. சிவாஜியில் வரும் வாஜி வாஜி சிவாஜி பாடலில் ரஜினி அணிந்திருந்த காஸ்ட்யூமை, ஏவிஎம்மின் காஸ்ட்யூம் குளோசட்டிலிருப்பதை ஏவிஎம் சரவணனின் பேத்தி அருணா குகன் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

ரஜினி ரசிகர்களுக்கு அது நாஸ்டாலஜி அனுபவம். இந்த காஸ்ட்யூம் மட்டுமில்லை, தங்கள் படத்தில் பயன்படுத்திய உடைகளை அம்போவென விடாமல் உரிய முறையில் பாதுகாத்து வைப்பது ஏவிஎம்மின் வழக்கம். இந்த வீடியோவுக்கு பதிலாக ஒரு ரஜினி ரசிகர் போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் மிஸ்டர் பாரத் பட ரஜினியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

மிஸ்டர் பாரத் 1986 இல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ஏவிஎம் தயாரித்த படம். அதில் ரஜினி உள்ளிட்டவர்கள் பயன்படுத்திய உடைகள் வழக்கம் போல் பாதுகாக்கப்பட்டன. வேறு படங்களில் பிரதான கதாபாத்திரங்கள் தவிர்த்து மற்ற கதாபாத்திரங்களுக்கு இந்த உடைகள் பயன்படுத்தப்படும். மிஸ்டர் பாரத் வெளியான அடுத்த வருடம் 1987 இல் ஏவிஎம் மீண்டும் ரஜினியை வைத்து மனிதன் படத்தை தயாரித்தது.

சிவாஜி, ரஜினிக்கு சில்வர் ஜுப்லி ஹிட் தந்த ஆப்கானிஸ்தான் காதர் கான்!

இயக்குநர் அதே எஸ்.பி.முத்துராமன். மிஸ்டர் பாரத்தில் ரஜினி பயன்படுத்திய டிஷர்ட்டை மனிதன் படத்தில் அடியாள் கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு அளித்திருந்தனர்.

ஒரு நிறுவனம் எத்தனைதூரம் சிக்கனமாகவும், திட்டமிட்டும் நடந்திருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. ஏவிஎம் போன்ற நேர்மையும், திட்டமிடலும் கொண்ட நிறுவனம் படத்தயாரிப்பிலிருந்து விலகியது தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட பேரிழப்பு.

Published by:Srilekha A
First published:

Tags: Rajini Kanth, Tamil Cinema