அவெஞ்சர்ஸ் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இப்படி தான் இருக்க வேண்டும் - அயர்ன் மேன்

உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் 2.789.7 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் வசூல் செய்து அவதார் படத்தின் வசூல சாதனையை முறியடித்தது.

news18
Updated: July 30, 2019, 4:56 PM IST
அவெஞ்சர்ஸ் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இப்படி தான் இருக்க வேண்டும் - அயர்ன் மேன்
அவெஞ்சர்ஸ்
news18
Updated: July 30, 2019, 4:56 PM IST
அயர்ன் மேன் கதாபாத்திரம் உயிரிழக்கும்போது அதிக வசனங்களை வைக்க வேண்டாம் என்று ராபர்ட் டவுனி ஜூனியர் கூறினார் என்று அவெஞ்சர்ஸ் படத்தின் கதையாசிரியர்கள் கூறியுள்ளனர்.

அவெஞ்சர்ஸ் படத்தின் கடைசி பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்தது.

இந்தியாவில் மட்டும் இந்தப் படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் 2.789 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் வசூல் செய்து அவதார் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது.


அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் மாபெரும் வெற்றியடைந்தாலும் படத்தில் அயர்ன் மேன்-இன் இறப்பு ரசிகர்களை வெகுவாக பாதித்தது. ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் மிக முக்கியமான ஒன்று அயர்ன் மேன் கதாபாத்திரம்.

இந்நிலையில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் எனக்கு அதிக வசனங்களை வைக்க வேண்டாம் என்று ராபர்ட் டவுனி ஜூனியர் கூறியதாக கதையாசிரியர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவெஞ்சர்ஸ் படத்தின் கதையாசிரியர்கள் கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் ஸ்டீபன் பீலே, ‘ அவெஞ்சர்ஸ் படத்தில் அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரத்துடன் நிறைய நேரம் செலவிட்டுள்ளனர். அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் டோனி ஸ்டார்க் உயிரிழக்கும் போது நாங்கள் அவருக்கு நிறைய வசனங்களை எழுதினோம். ஆனால் ராபர்ட் டவுனி ஜூனியருக்கு அது பிடிக்கவில்லை. அவர் அதிக வசனங்களை வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். டோனி ஸ்டார்க் என்ற கதாபாத்திரம் அதிகம் பேசுபவன். அதனால் அவன் உயிரிழக்கும் போது அதிகம் பேசாமல் இருந்தால் அது ரசிகர்களை அதிகமாக பாதிக்கும். அதனால் நான் பேசாமல் இருப்பதே நல்லது என்றார். அவர் சொன்னது போலவே அந்த காட்சி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது ’ என்று கூறியுள்ளனர்.

Loading...

Also watch

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...