அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அவதார் இரண்டாம் பாகத்தின் தலைப்பு முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது. CinemaCon நிகழ்வில் இந்த அறிவியல் புனைகதை திரைப்படத்தின் காட்சிகளும் திரையிடப்பட்டது. அப்போது பார்வையாளர்களுக்கு 3D கண்ணாடிகள் வழங்கப்பட்டன. 2009-ல் வெளியான அவதார் திரைப்படத்தைப் போலவே, கேமரூன் அதன் தொடர்ச்சிகளிலும் விஷுவல் விருந்து தருவார் எனத் தெரிகிறது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் பல ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ளது. எல்லா காலத்திலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாகவும் மாறியிருக்கிறது. பல மாத ஊகங்களுக்குப் பிறகு, அவதார் 2 படத்தைத் தயாரித்துள்ள 20th செஞ்சுரி ஸ்டுடியோஸ் முறையான வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது. இத்திரைப்படம் டிசம்பர் 16, 2022 அன்று வெளியாக உள்ளது. தி வே ஆஃப் தி வாட்டர் அவதாரின் நிகழ்வுகளைத் தொடர்ந்து சல்லி குடும்பத்தை மையமாகக் கொண்டது.
KRK Review: காத்து வாக்குல ரெண்டு காதல் எப்படி இருக்கிறது?
Salim Ghouse: சின்ன கவுண்டர், வேட்டைக்காரன் பட வில்லன் சலீம் கவுஸ் காலமானார்
CinemaCon என்பது திரையரங்கு உரிமையாளர்களின் வருடாந்திர மாநாடு. இந்த வருடம் ஏப்ரல் 25-28 வரை லாஸ் வேகாஸில் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த நிகழ்வில் பல பெரிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர்கள் மற்றும் வெளியீட்டு தேதிகள் வெளியிடப்படும். அவதார் 2 படத்தின் தலைப்பைத் தவிர, படத்தின் இரண்டு காட்சிகளும் CinemaCon-ல் காட்டப்பட்டன. ஸ்கிரீன் ராண்ட் போன்ற காட்சிகளைப் பார்த்தவர்கள், படம் முதல் படத்தின் அளவை உயர்த்துவதாகவும், புதிய நவி பழங்குடியினரை, குறிப்பாக தண்ணீருக்கு அருகில் வசிப்பவர்களைக் காட்டுவதாகவும் கூறுகிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.