அவதார் திரைப்படம் 13 வருடங்களுக்கு முன் வெளியான போது யுஎஸ்ஸிலும், சர்வதேச அளவிலும் வசூல் சாதனை படைத்தது. உலக அளவில் அதிகம் வசூலித்தத் திரைப்படமாக இப்போதும் அவதாரே உள்ளது. அவதாரின் தொழில்நுட்பம், அது கொடுத்த திரை அனுபவம் காரணமாக இரண்டாம் பாகத்துக்கு உலகமே காத்திருந்தது.
டிசம்பர் 16 ஆம் தேதி வெளியான அவதார் இரண்டாம் பாகம், அவதார் : தி வே ஆஃப் வாட்டர் எதிர்பாரத எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. படத்தின் தொழில்நுட்பம், அது கொடுத்த காட்சி அனுபவம் ரசிகர்களை திருப்தி செய்தாலும், கதையில்லாமல் நகர்ந்த நீண்ட முன்பகுதி அவர்களுக்கு அலுப்பைத் தந்தது. அவதார் போன்று அதன் இரண்டாம் பாகம் இல்லை என்பது பெரும்பாலானவர்களின் கருத்து. எனினும், படத்தில் தெரியும் ஜேம்ஸ் கேமரூனின் அர்ப்பணிப்பும், உழைப்பும் ரசிகர்களால் மரியாதையுடனே குறிப்பிடப்படுகிறது என்பது நேர்மறையான செய்தி.
அவதார்: தி வே ஆஃப் வாட்டர் 350 - 400 மில்லியன் டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. துல்லியமான பட்ஜெட் தெரியவில்லை. ஆனால், இந்த நகம்பருக்குள் ஏதோ ஒன்று என்பது மட்டும் உறுதி. அதாவது, சுமார் 3,200 கோடிகள் செலவில் அவதார் : தி வே ஆஃப் வாட்டரை எடுத்துள்ளனர். இதேபோல் இன்னொரு மடங்கு வசூலித்தால் போட்ட பணத்தை படம்
திருப்பும். இரண்டு மடங்கு என்றால் வெற்றி. இரண்டு பில்லியன் டாலர்களைத் தாண்டினால் மெகா வெற்றி. எனினும் அவதாரின் ஒட்டு மொத்த வசூலான 2.9 பில்லின் டாலர்களைத் தாண்டினால் மட்டுமே கேம்ஸ் கேமரூனின் 13 வருட உழைப்புக்கு பலன் கிடைக்கும்.
கடந்த வெள்ளிக்கிழமை யுஎஸ்ஸில் 4,202 திரையரங்குகளில் வெளியான அவதார் : தி வே ஆஃப் வாட்டர் முந்தைய நாள் ப்ரீமியர் காட்சியும் சேர்த்து, ஞாயிறுவரை 134 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
வெள்ளி - 53 மில்லியன் டாலர்கள்
சனி - 44.5 மில்லியன் டாலர்கள்
ஞாயிறு - 36.5 மில்லியன் டாலர்கள்
மொத்தம் (ப்ரீமியர் காட்சியும் சேர்த்து) - 134 மில்லியன் டாலர்கள்.
யுஎஸ்ஸுக்கு வெளியே, அவதார் : தி வே ஆஃப் வாட்டர் சுமார் 300.5 மில்லியன் டாலர்களை ஞாயிறுவரை வசூலித்துள்ளது. இதில் பிரான்ஸில் 14 ஆம் தேதியும், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் 15 ஆம் தேதியும், பிற நாடுகளில் 16 ஆம் தேதியும் படம் வெளியானது. யுஎஸ்ஸுக்கு வெளியே சீனா 57.10 மில்லியன் டாலர்கள் வசூலுடன் முன்னிலையில் உள்ளது.
சில முக்கிய நாடுகளில், ஞாயிறுவரை அவதார் : தி வே ஆஃப் வாட்டர் படத்தின் வசூல் (மில்லியன் டாலர்களில்)...
பிரான்ஸ் - 19.30
ஜெர்மனி - 19.90
இத்தாலி - 10.20
ஸ்பெயின் - 7.80
யுகே - 14.20
யுஎஸ் - 134
பிரெசில் - 8.50
மெக்சிகோ - 12.90
ஆஸ்ட்ரேலியா - 10.80
இந்தியா - 18.10
தென்கொரியா - 24.70
தைவான் - 5.20
சீனா - 57.10
இவை அவதார் : தி வே ஆஃப் வாட்டர் வெளியான சில பிரதான நாடுகள். இன்னும் பல நாடுகளில் படம் வெளியாக உள்ளது.
Also read... 'வீட்டுக்குள் திகில்.. மகளுக்கு பிடித்த பேய்..' கணவர் விக்னேஷ் சிவனோடு 'கனெக்ட்' படம் பார்த்த நயன்தாரா!
உலக கால்பந்துப் போட்டியில் ஒட்டு மொத்த உலகமும் கவனம் கொண்டிருந்த போது அவதார் : தி வே ஆஃப் வாட்டர் வெளியானது. ஞாயிறு அர்ஜென்டினா - பிரான்ஸ் கலந்து கொண்ட இறுதிப்போட்டி நடந்தது. கால்பந்தாட்ட ரசிகர்கள் தொலைக்காட்சியில் கண்ணைப் பதித்துக் கிடந்தனர். அந்தச் சூழலிலும் மூன்று தினங்களில் உலக அளவில் 434.50 மில்லியன் டாலர்களை படம் வசூலித்திருப்பது சாதனைதான் என்கிறார்கள். எனினும், அவதாரின் 2.9 பில்லியன் என்ற 'பென்ச்' மார்க்கை இரண்டாம் பாகம் எட்டுமா என்பது இன்னும் கேள்விக்குறிதான்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment