ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

குறையாத கூட்டம்... வசூலை குவிக்கும் அவதார்: தி வே ஆஃப் வாட்டர்!

குறையாத கூட்டம்... வசூலை குவிக்கும் அவதார்: தி வே ஆஃப் வாட்டர்!

அவதார் 2

அவதார் 2

17 நாட்களுக்குப் பிறகும் படம் இன்னும் இரட்டை இலக்கத்தில் வசூல் செய்வதன் மூலம் படத்திற்கு ரசிகர்கள் தரும் வரவேற்பை புரிந்துக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் தொய்வில்லாமல் வசூலை குவித்து வருகிறது.

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் தடையில்லாமல் வசூலை குவித்து வருகிறது. வெளியாகி 17 நாட்களுக்கு பிறகு திரையரங்க டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் குறையவில்லை. இந்தியாவில் வெளியான முதல் நாளில் 40 கோடி ரூபாய் வசூலித்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம், அன்றிலிருந்து தினமும் இரட்டை இலக்க வசூலை குவித்து வருகிறது. புத்தாண்டு தினத்திலும் இப்படத்துக்கு கூட்டம் குறையவில்லை.

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல தொடக்கத்தைப் பெற்றது. ஜேம்ஸ் கேமரூன்-இயக்கிய இப்படம் முதல் நாளான டிசம்பர் 16-ம் தேதி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 40.50 கோடி சம்பாதித்தது. இதன் மூலம் இந்தியாவில் முதல் நாளில் 53.10 கோடி ஈட்டிய அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) படத்துக்குப் பிறகு, இரண்டாவது அதிக பாக்ஸ் ஆபிஸ் ஓப்பனராக மாறியது. இந்தப் படம் டிசம்பர் 31-ம் தேதி கிட்டத்தட்ட ரூ. 12.50 கோடியை வசூலித்தது. மேலும் புத்தாண்டு அன்று, அவதார் 2 சுமார் ரூ. 17 கோடியை வசூலித்துள்ளது. 17 நாட்களுக்குப் பிறகும் படம் இன்னும் இரட்டை இலக்கத்தில் வசூல் செய்வதன் மூலம் படத்திற்கு ரசிகர்கள் தரும் வரவேற்பை புரிந்துக் கொள்ளலாம்.

துணிவு ட்ரெய்லருக்கு கார் ஊர்வலம்.. வெறித்தனமாக கொண்டாடிய மலேசியா ரசிகர்கள்!

அறிக்கைகளின்படி, இந்தியாவில் அவதார் 2 படத்தின் மொத்த வசூல் இப்போது ரூ.333 கோடியாக உயர்ந்துள்ளது. இது தொடர்ந்தால், இந்தியாவில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேமின் மொத்த வசூலான ரூ.367 கோடியை இந்தப் படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Avatar