Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உலகளவில் 12,000 கோடிக்கும் மேல் வசூலை குவித்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர்!

உலகளவில் 12,000 கோடிக்கும் மேல் வசூலை குவித்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர்!

அவதார் 2

அவதார் 2

இந்தியாவில், அவதார் 2 திரைப்படம் ஜனவரி 3 ஆம் தேதி சுமார் 4 கோடி ரூபாய் வசூலித்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் உலகளவில் 12,000 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் வெளிநாட்டில் பிரமாதமாக வியாபாரம் செய்து வருகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, இப்படம் உலகளவில் 1.5 பில்லியன் டாலரை கடந்துள்ளது. இது இந்திய மதிப்பில் 12 ஆயிரம் கோடிகளுக்கும் மேல். உலக அளவில் 10-வது பெரிய படமாக மாறியுள்ள அவதார் 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் சிறப்பான முறையில் வருவாய் ஈட்டி வருகிறது.

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் டிசம்பர் 16-ம் தேதி இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ 40.50 கோடி வசூலுடன் தனது ஓட்டத்தை தொடங்கியது. அவதார் 2 படம் இந்திய மார்க்கெட்டில் இரண்டாவது அதிக வசூல் பெற்ற பாக்ஸ் ஆபிஸ் ஓப்பனராக மாறியது. 2019-ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் அதன் தொடக்க நாளில் ரூ 53.10 கோடி வசூலித்தது. ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 திரைப்படம் தற்போது உலகளவில் 1.5 பில்லியனை தாண்டியுள்ளது. இப்படம் 2022-ஆம் ஆண்டு வெளியான டாப் கன்: மேவரிக்கை வசூலில் முந்தியுள்ளது. அதோடு உலகளவில் 10-வது பெரிய திரைப்படமாகவும் மாறியுள்ளது. ஐரோப்பாவில், அவதார் 2, ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் பட வசூலையும் முந்தியுள்ளது.

இந்தியாவில், அவதார் 2 திரைப்படம் ஜனவரி 3 ஆம் தேதி சுமார் 4 கோடி ரூபாய் வசூலித்தது. 20 நாட்களுக்குப் பிறகும் படத்தின் வசூல் குறையவில்லை. வர்த்தக அறிக்கைகளின்படி, இந்தியாவில் அவதார் 2 படத்தின் மொத்த வசூல் இப்போது ரூ.354.05 கோடியாக உள்ளது. இது தொடர்ந்தால், இந்தியாவில் ஆமிர்கானின் தங்கல் படத்தின் வாழ்நாள் வசூலான ரூ.387.38 கோடியை இப்படம் முறியடிக்க முடியும். இந்தியாவில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேமின் மொத்த வசூல் சுமார் 367 கோடி ரூபாயை முறியடிக்கும். இதையடுத்து அவதார் 2 இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படமாக இருக்கும்.

தமிழ்-தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான சம்பவங்கள்!

ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 திரைப்படத்தில் சாம் வொர்திங்டன், ஜோ சல்டானா, சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர். படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Avatar