ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் அவதார் டெக்னீஷியன்கள்!

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் அவதார் டெக்னீஷியன்கள்!

அவதார் - அயலான்

அவதார் - அயலான்

நிறைய கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால், 'அயலான்' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் அவதார் படத்தில் பணிபுரிந்த டெக்னீஷியன்கள் இணைந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவர். இயக்குனர் ரவிகுமாருடன் 'அயலான்' என்ற சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் கைக்கோர்த்துள்ளார். இந்தப் படம் மூன்று வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பில் உள்ளது. இதற்கிடையே தற்போது 'அவதார்' தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக சமீபத்திய செய்தி தெரிவிக்கிறது.

ஹாலிவுட் படமான 'அவதார்' படத்தில் பணியாற்றிய பல டெக்னீஷியன்களை, கிராஃபிக் வேலைகளுக்காக அயலான் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் படத்தின் முதற்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் படம் 2023 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறைய கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால், 'அயலான்' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது.

சயின்ஸ் ஃபிக்ஷன் படம் என்று கூறப்படும் 'அயலான்' படத்தை, ரவிக்குமார் இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இஷா கோப்பிகர், யோகி பாபு, கருணாகரன், பானு ப்ரியா மற்றும் பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னதாக 2021-ல் அயலான் படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான 'வேற லெவல் சகோ' பாடல் வெளியானது.

பதான் படத்தை உங்கள் மகளுடன் பாருங்கள் - ஷாருக்கானுக்கு பாஜக சபாநாயகர் கிரீஷ் கெளதம் சவால்

இதற்கிடையில், சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் மடோன் அஸ்வினுடன் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணி பாதியை தாண்டியுள்ளது. இதனை 2023 கோடையில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sivakarthikeyan