ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்து மதத்தின் பாதிப்பில் உருவானதா அவதார் 2? - என்ன சொல்கிறார் ஜேம்ஸ் கேமரூன் ?

இந்து மதத்தின் பாதிப்பில் உருவானதா அவதார் 2? - என்ன சொல்கிறார் ஜேம்ஸ் கேமரூன் ?

அவதார் - ஜேம்ஸ் கேமரூன்

அவதார் - ஜேம்ஸ் கேமரூன்

இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டு அவதார் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், 12 ஆண்டுகளுக்கு முன் அவதார் முதல் பாகம் வெளியானபோது ஜேம்ஸ் கேமரூன் அளித்த பேட்டி வைரலாகிவருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

முதல் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான 'அவதார் - தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் கலவயான விமர்சனங்களேய பெற்றது. இருப்பினும் உலக அளவில் இந்தப் படம் உலக அளவில் 10,100 கோடி அளவுக்கு வசூலித்து வசூல் சாதனை படைத்துவருகிறது. 3 மணி நேரங்களுக்கு மேலாக ஓடும் இத்திரைப்படம் பிரம்மாண்டமான விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளால் நம்மை வேறு உலகுக்கே அழைத்து செல்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்து மதத்தின் அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், ஆரிய பிராமண அமைப்பின் கருத்துக்களை உலகுக்கு சொன்ன இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனை கண்டிக்கிறது. அவதார் - சமஸ்கிருத பெயர், நீலம் - கிருஷ்ணரின் வண்ணம், நெற்றி- நாமம் , டிராகன் - கருடன், திமிங்கலம் - மச்ச அவதாரம் என்று குறிப்பிட்டிருந்தது. அக்கட்சியின் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்தன.

கேமரூன் அவதார் படத்தின் நான்கு பாகங்களை உருவாக்கிவருவதாக இரண்டாம் பாகம் வெளியாவதற்கு முன் தகவல் வெளியானது. அதில் அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தையும், அவதார் 3 படத்தையும் முழுமையாக அவர் உருவாக்கி விட்டதாகவும் இரண்டாம் பாகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் அடுத்தடுத்த பாகங்கள் முழுமையாக உருவாக்கப்படும் என்று கேமரூன் தெரிவித்திருந்தார்.

' isDesktop="true" id="865116" youtubeid="m7iHpnPqbLo" category="cinema">

தற்போது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டு அவதார் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், 12 ஆண்டுகளுக்கு முன் அவதார் முதல் பாகம் வெளியானபோது ஜேம்ஸ் கேமரூன் அளித்த பேட்டி வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் ''நான் ஒரு ஆர்ட்டிஸ்ட். இந்து மத புராதாண ஓவியங்களாலும், வண்ணங்கள் மற்றும் காட்சிகளாலும் ஈர்க்கப்பட்டேன். இந்து மதம் மீது வியப்புண்டு. ஒரு மதத்துக்கென இந்தப்படம் எடுக்கப்படவில்லை. இது பொதுவான ஆன்மீகத்துக்கானது'' என்று குறிப்பிட்டிருந்தார்.


First published:

Tags: Avatar, Hindu, James Cameron