ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உலகளவில் ரூ. 1500 கோடி வசூலைத் தாண்டிய அவதார் 2… இந்தியாவிலும் வசூல் வேட்டை

உலகளவில் ரூ. 1500 கோடி வசூலைத் தாண்டிய அவதார் 2… இந்தியாவிலும் வசூல் வேட்டை

அவதார் 2 - Avatar the way of water

அவதார் 2 - Avatar the way of water

தமிழ்நாட்டைப் பொருத்தளவில் பெரிய படங்கள் ரிலீஸாகாத நிலையில் அவதார் 2 படத்தின் வசூல் வேட்டை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்துள்ள அவதார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 1500 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவிலும் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு காணப்படுவதால் படத்தை திரையிட்டவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

3டி தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள அவதார் 2 திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் 12 ஆயிரம் திரைகளில் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

முதல் பாகம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீது சினிமா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இதனை பூர்த்தி செய்யும் அளவுக்கு படம் இருப்பதாக விமர்சனங்கள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் அவதார் 2 படம் வெளியான வெள்ளிக் கிழமையன்று மட்டும் ரூ. 40.5 கோடி ரூபாய்க்கு வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. 2 நாட்களில் ரூ. 80 கோடிக்கும் அதிகமாக அவதார் 2 வசூலித்துள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமையான இன்றுடன் சேர்த்து இந்தப் படம் 3 நாட்களில் மட்டும் ரூ. 125 கோடியை இந்தியாவில் வசூலிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் அதிக திரையரங்குகளில் அவதார் 2 திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தி பட வட்டாரங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு இணையான வரவேற்பை அவதார் 2 பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்தின் நச் லுக்.. மஞ்சு வாரியர் குரல்.. துணிவு பட ’காசேதான் கடவுளடா’ பாடல் க்ளிக்ஸ்!

குறிப்பாக இந்தாண்டு நல்ல வசூலைக் கொடுத்த இந்தி படங்களான த்ரிஷ்யம் 2, பூல் புலயா படங்களை விடவும் இந்தி வட்டாரத்தில் அவதார் 2 படத்திற்கு வசூல் அதிகமாக உள்ளது.

உலக அளவில் இந்தப் படம் 2 நாட்களில் ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக 3 நாட்களில் இந்தப் படத்தின் வசூல் ரூ. 3 ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று சினிமா வர்த்தகர்கள் கணித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொருத்தளவில் பெரிய படங்கள் ரிலீஸாகாத நிலையில் அவதார் 2 படத்தின் வசூல் வேட்டை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Avatar, Hollywood