ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வசூலை அள்ளிக் குவிக்கும் அவதார் 2 திரைப்படம்… ஸ்பைடர் மேன் கலெக்சனை தாண்டியது…

வசூலை அள்ளிக் குவிக்கும் அவதார் 2 திரைப்படம்… ஸ்பைடர் மேன் கலெக்சனை தாண்டியது…

அவதார் : தி வே ஆஃப் வாட்டர்

அவதார் : தி வே ஆஃப் வாட்டர்

உலக அளவில் அதிகம் வசூலித்த படங்களில் அவதார் 2 திரைப்படம் 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அவதார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. இந்தப் படம் சமீபத்தில் வெளியான ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படத்தின் வசூலை இன்று தாண்டியுள்ளது. எதிர்பார்த்த வெற்றியை இந்தப் படம் பெற்றிருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். 3டி தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள அவதார் 2 திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் 12 ஆயிரம் திரைகளில் வெளியிடப்பட்டிருந்தது. சர்வதேச அளவில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் இந்தப் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

முதல் பாகம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீது சினிமா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இதனை பூர்த்தி செய்யும் அளவுக்கு படம் இருந்ததால் வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில் அவதார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 1.916 பில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மதிப்பில் இது ரூ. 15,500 கோடியாக உள்ளது.

அவதார் 2 திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் 572 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இந்நிலையில் இன்று ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படத்தின் வசூலை அவதார் 2 திரைப்படம் பின்னுக்கு தள்ளியுள்ளது. உலக அளவில் அதிகம் வசூலித்த படங்களில் அவதார் 2 திரைப்படம் 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த படத்திற்கு வெளிநாடுகளில் குறிப்பாக இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இங்கு மட்டும் சுமார் 475 கோடி ரூபாய் அளவுக்கு அவதார் 2 திரைப்படம் வசூலித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Avatar, Hollywood