Home /News /entertainment /

பாலாவின் அவன் இவன் பட நடிகர் ராமராஜ் திடீர் மறைவு

பாலாவின் அவன் இவன் பட நடிகர் ராமராஜ் திடீர் மறைவு

ராமராஜ்

ராமராஜ்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேல சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராம்ராஜ், சினிமாவிற்கு வருவதற்கு முன்பே கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

    ‘அவன் இவன்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் ராமராஜ் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.

    தமிழ் சினிமாவின், முன்னணி இயக்குனரான பாலா இயக்கத்தில், விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான அவன் இவன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ராமராஜ். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வந்த இவர், சினிமாவுக்கு வருவதற்கு முன் கூட்டுறவு வங்கி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அரபிக் கடலோரம் 119 கோடியில் சொகுசு வீட்டை வாங்கிய ரன்வீர் சிங்!

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேல சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராம்ராஜ், சினிமாவிற்கு வருவதற்கு முன்பே கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். வங்கியில் ஓய்வு பெற்ற பின்னர், அவன் இவன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் இன்றளவும் அவன் இவன் படம் தான் ராம்ராஜின் அடையாளமாக இருக்கிறது.

    அவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை அவரின் சொந்த ஊரான முதுகுளத்தூரில் நடைபெற உள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி