42 ஆண்டுகளுக்குப் பின் ‘அவள் அப்படித்தான்’ ரீமேக் - ஸ்ருதிஹாசனுக்கு முக்கிய ரோல்... ரஜினி & கமல் கேரக்டரில் யார் தெரியுமா?

அவள் அப்படித்தான் திரைப்படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

42 ஆண்டுகளுக்குப் பின் ‘அவள் அப்படித்தான்’ ரீமேக் - ஸ்ருதிஹாசனுக்கு முக்கிய ரோல்... ரஜினி & கமல் கேரக்டரில் யார் தெரியுமா?
அவள் அப்படித்தான் ரீமேக்
  • Share this:
மறைந்த இயக்குநர் ருத்ரய்யா இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளியான படம் அவள் அப்படித்தான். அந்தக் காலகட்டத்தில் பெண்ணியம் பேசிய படங்களில் முக்கியமான படமாக, இந்தப் படம் அமைந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை தற்போது பாணா காத்தாடி இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார். ஸ்ரீப்ரியா நடித்த மஞ்சு என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சிம்பு, துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பத்ரி வெங்கடேஷ் கூறுகையில், “ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் படித்து முடித்து முதல்முறையாக படம் இயக்கியது ருத்ரய்யா தான். நானும் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சினிமாவுக்கு வந்ததால் அந்தப் படம் என் இதயத்துக்கு நெருக்கமானது. வேறு காரணங்களும் இருக்கின்றன. ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. படத்தின் உரிமை யாரிடம் இருக்கிறது என தெரியவில்லை. ருத்ரய்யா தற்போது உயிருடன் இல்லை. அவரது மகள் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். ஆனால், அவருக்கும் அது பற்றி தெரியுமா என உறுதியாக தெரியவில்லை.


படத்தைக் காட்சிக்கு காட்சி அப்படியே ரீமேக் செய்ய நான் விரும்பவில்லை. ஆனால் எந்த தடையும், இடையூறும் இல்லாமல் எடுக்க விரும்புகிறேன். எனது அனைத்து படங்களுக்கும் யுவன் இசையமைத்திருப்பார். ஆனால் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: பிரபல இசையமைப்பாளர் வாஜித்கான் உயிரிழப்பு - கொரோனா காரணமா?
First published: June 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading