Komagan: ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடகர் கோமகன் கொரோனாவுக்கு பலி

கோமகன்

கோமகன் சென்னை மக்களிடையே பிரபலமான அனைத்து பார்வையற்ற இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களைக் கொண்ட ஒரு இசைக்குழுவுக்கும் தலைமை தாங்கினார்.

  • Share this:
    ஆட்டோகிராப் படத்தில் நடிகை சிநேகாவுடன் நடித்த பார்வையற்ற பாடகர் கோமகன் மறைந்துள்ளார்.

    இயக்குநர் சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் அப்போது மிகப்பெரிய மோட்டிவேஷனல் பாடலாக மாறியது. இந்த பாடலில் நடிகை சினேகாவுடன் நடித்தவர் மாற்றுத்திறனாளியான கோமகன். இவர் தற்போது கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.

    பார்வையற்றவரான கோமகன் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலில், ‘மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும் அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்’ என்ற வரியை உணர்ச்சிப்பூர்வமாக பாடி இருப்பார். இந்தப் பாடல் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்தது. இதனால் கோமகன் பிரபலம் அடைந்தார். இசை பள்ளி ஒன்றை நடத்தி வந்த கோமகன், 2019-ம் ஆண்டு தமிழக அரசின் விருதினை பெற்றார்.

    கோமகன் சென்னை மக்களிடையே பிரபலமான அனைத்து பார்வையற்ற இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களைக் கொண்ட ஒரு இசைக்குழுவுக்கும் தலைமை தாங்கினார். 'ஆட்டோகிராப்' படத்திற்குப் பிறகு விஜய்யின் 'சுறா' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், கோமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஐ.சி.எப்.பில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: