• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரோலிங் ஸ்டோன் ஆகஸ்ட் மாத இதழில் பாடகர் அறிவின் புகைப்படம் இடம்பெறும் என அறிவிப்பு

ரோலிங் ஸ்டோன் ஆகஸ்ட் மாத இதழில் பாடகர் அறிவின் புகைப்படம் இடம்பெறும் என அறிவிப்பு

அறிவு

அறிவு

அட்டைப் படத்தில் அறிவு இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  • Share this:
    ரோலிங் ஸ்டோன் ஆங்கில பத்திரிகையின் ஆகஸ்ட் மாத அட்டைப் படத்தில் பாடகர் மற்றும் பாடலாசிரியர் தெருக்குரல் அறிவு இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியானது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் முணுமுணுக்கச் செய்த இந்த பாடல், இதுவரை யூ-ட்யூபில் 320 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

    தவிர, 'நீயே ஒளி’ என்ற பாடலை தெருக்குரல் அறிவுடன், ஷான் வின்செண்ட் டீ பால் எழுதி, அவரே பாடியிருந்தார். இந்தப் பாடல் சார்பட்டா பரம்பரை படத்திலும் இடம்பெற்றது. அந்த வெர்சனை அறிவு எழுதி, சந்தோஷ் நாராயணன் பாடியிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இந்நிலையில் சர்வதேச இசை இதழான ரோலிங் ஸ்டோனின் இந்திய பதிப்பின், ஆகஸ்ட் மாத அட்டைப் படத்தில் 'எஞ்சாய் எஞ்சாமி' மற்றும் நீயா ஒளி பாடல்களின் சர்வதேச சாதனைகளை பாராட்டும் வகையில் பாடகி தீ மற்றும் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் மட்டுமே இடம் பெற்றன.

    அட்டைப் படத்தில் அறிவு இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் பெரிய அளவில் பேசுபொருளானது. இந்நிலையில் தற்போது ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கையின் ஆகஸ்ட் மாத இதழில் பாடகர் அறிவின்
    புகைப்படம் இடம் பெறுவதாக அந்நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து இந்த இது பாடகர் அறிவுக்கு கிடைத்த நீதியாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: