Home /News /entertainment /

கவனம் பெறும் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள ’1947’ படத்தின் டீசர்!

கவனம் பெறும் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள ’1947’ படத்தின் டீசர்!

1947 டீசர்

1947 டீசர்

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆகஸ்ட் 16 1947 படத்தின் டீசர் வெளியானது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள 1947 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான்கராத்தே உள்ளிட்ட படங்களை தயாரித்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படத்தையும் தயாரிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய உதவி இயக்குனர் பொப்குமார் இயக்கியுள்ள 'ஆகஸ்ட் 16, 1947' என்ற படத்தை தயாரித்துள்ளார். அதில் கவுதம் கார்த்தி நாயகனாக நடித்திருக்கிறார். சுதந்திர போராட்ட சமயத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை தொகுப்பாக கொண்டு 1947 படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.



நடிகர் சிம்பு இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். டீசரில்  இடம்பெற்றிருக்கும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற தொடங்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: A.R.murugadoss, Kollywood, Tamil Cinema

அடுத்த செய்தி