ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமாரின் பொய்க்கால் குதிரை படத்தில் நடிக்க நடிகர்கள் தேவைப்படுகிறார்கள்.
அடல்ட் காமெடி என்ற பெயரில் ஆபாச காட்சி, இரட்டை அர்த்த வசனம் என்று தமிழ் சினிமாவில் இரு படங்களை தந்தவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். அவர் மீது தவறில்லை. அப்படிப்பட்ட படங்களை ரசிக்க தமிழகத்தில் பெருவாரியான கூட்டம் ஒன்று உள்ளது. அவர் தனது ஹர ஹர மகாதேவகி இமேஜை மாற்றி எடுக்கும் படம் பொய்க்கால் குதிரை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதில் பிரபுதேவா செயற்கைகால் பொருத்தியவராக வருகிறார். முக்கியமான வேடத்தில் வரலட்சுமி. ஆக்ஷன் படமாக தயாராகும் இந்தப் படத்தில் நடிக்க 5 - 12 வயதுள்ள குழந்தை நட்சத்திரங்கள் தேவைப்படுகிறார்கள். அதே போல் 20 - 45 வயதுள்ள நடிகர்களும், அதே வயதுள்ள நடிகைகளும் தேவைப்படுகிறார்கள்.
நடிப்பில் விருப்பமும், திறமையும் உள்ளவர்கள் 8608499151 என்ற வாட்ச்அப் எண்ணிலோ, pkcasting2021@gmail.com என்ற மெயிலுக்கோ உங்கள் விவரங்கள், மேக்கப் இல்லாத உங்களின் புகைப்படத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Prabhu deva