• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திரைப்படத்துக்கு நெகட்டிவ் ரிவ்யூ செய்யாமல் இருக்க ரூ.25 லட்சம் லஞ்சம்:  நடிகருக்கு எதிராக கசிந்த ஆதாரம்!

திரைப்படத்துக்கு நெகட்டிவ் ரிவ்யூ செய்யாமல் இருக்க ரூ.25 லட்சம் லஞ்சம்:  நடிகருக்கு எதிராக கசிந்த ஆதாரம்!

விமர்சனம் செய்ய பணம் பறிப்பு

விமர்சனம் செய்ய பணம் பறிப்பு

கோச்சடையான் திரைப்படத்தை விமர்சித்து ரஜினி ரசிகர்களின்  கோபத்துக்கு ஆளானார்.  நடிகர் தனுஷ் நடித்த  ராஞ்சனா திரைப்படத்தை விமர்சிப்பதாக கூறி தனுஷுக்கு எதிராக தனி மனித தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது

  • Share this:
திரைப்பட நடிகரும் திரைப்பட விமர்சகருமான  கமால் ஆர் கான் திரைப்படங்களுக்கு  நெகட்டிங் ரிவ்யூ செய்யாமல் இருக்க  ரூ. 25லட்சம் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வெளியானதுமே அதற்கான  விமர்சனங்களும் வெளியாகி விடுகின்றன. பலரும் தங்களது விமர்சனங்களை யூ டியூபில் வெளியிடுகின்றனர். இவ்வாறு விமர்சனங்களை வெளியிடுவோரில் ஒருசிலர்  பணத்தை பெற்றுக்கொண்டு ஒரு திரைப்படத்துக்கு எதிராகவோ, ஆதரவாகவோ  ’ரிவ்யூ’ செய்வதாக கூறப்படுகிறது.  நடிகரும் திரைப்பட விமர்சகருமான கமால் ஆர் கானுக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலிவுட்டை சேர்ந்த கே.ஆர்.கே. எனப்படும் கமால் ஆர் கான் திரைப்பட நடிகரும்,  எழுத்தாளரும் விமர்சகரும் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு  பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றிபெற்றால் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  இதேபோல், கோச்சடையான் திரைப்படத்தை விமர்சித்து ரஜினி ரசிகர்களின்  கோபத்துக்கு ஆளானார்.  நடிகர் தனுஷ் நடித்த  ராஞ்சனா திரைப்படத்தை விமர்சிப்பதாக கூறி தனுஷுக்கு எதிராக தனி மனித தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

மேலும் படிக்க: சைட் போஸில் கவர்ச்சி காட்டும் சமந்தா... வைரலாகும் புகைப்படம்




இந்நிலையில்,  நடிகரும், தயாரிப்பாளரும் ரோஹித் சவுத்ரி வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,  கே.ஆர்.கே. உடனான தொலைப்பேசி உரையாடலை அவர் வெளியிட்டுள்ளார்.  இந்திய திரைப்பட துறையின் மிகப்பெரிய  பிளாக்மெயிலர் என்றும் கே.ஆர்.கே.வை அவர் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் சூர்யாவை கண்டித்து பாஜக இளைஞரணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!


அவர் வெளியிட்டுள்ள தொலைபேசி உரையாடலில்  இயக்குநர், தயாரிப்பாளர்  அனில் சர்மாவிடம் அவரது படத்துக்கு  விமர்சனம் செய்ய கே.ஆர்.கே. ரூ.25 லட்சம் கேட்பதும் பின்னர்  5லட்சத்தை குறைத்துவிட்டு ரூ.20 லட்சம் தரும்படி கூறுவதும் பதிவாகியுள்ளது.  கே.ஆர்.கே. கேட்கும் பணத்தை தரவில்லை என்றால் திரைப்படத்துக்கு எதிராக தவறான விமர்சனத்தை அவர் மேற்கொள்வார் என்றும் தனிநபர் தாக்குதலில் அவர் ஈடுபடுவார் என்றும் ரோஹித் சவுத்ரி  கூறியுள்ளார். தற்போது இந்த ஆடியோ விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: