Home /News /entertainment /

நடிகை ஷாலு ஷம்மு ஃபேஸ்புக் பக்கத்தை முடக்க முயற்சி

நடிகை ஷாலு ஷம்மு ஃபேஸ்புக் பக்கத்தை முடக்க முயற்சி

நடிகை ஷாலு ஷம்மு

நடிகை ஷாலு ஷம்மு

Actress Shalu Shammu | சமூக வலைதளத்தை மோசடி கும்பல் நூதன முறையில் முடக்க முயற்சிப்பதாக நடிகை ஷாலு ஷம்மு எச்சரிக்கை பதிவை வெளியிட்டு உள்ளார்.

    சைபர் குற்றங்களானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப குற்றங்களையும் நவீன முறையில் மோசடிக் கும்பல்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் போலி இணையதள பக்கங்களை உருவாக்கி மோசடி செய்த கும்பல், படிப்படியாக தங்கள் மோசடிகளை நவீனப்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாக ஃபேஸ்புக் கணக்குகளை போலியாக உருவாக்கி கடந்த சில மாதங்களாக பணம் பறிக்கும் கும்பல் தீவிரமாக செயல்பட்டு வந்தது.

    தற்போது சமூக வலைதளப் பக்கங்கள் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் வசதிகளும் உருவாக்கப்பட்டதையடுத்து, அதிக followerகளை கொண்ட வர்கள் பிரபலங்களை தொழில் போட்டி காரணமாகவும் ,மிரட்டி பணம் பறிப்பதற்காகவும் பல்வேறு முறைகளில் சமூக வலைதளப் பக்கங்களை முடக்கி மோசடி செய்யும் கும்பல் தீவிரமாக செயல்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக நடிகை ஒருவரின் இதுபோன்று சமூக வலைத்தள பக்கத்தை மோசடி கும்பல் முடக்க முயன்றதாக எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் , தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகம் படங்களில் நடிகையாக பிரபலமானவர் ஷாலு ஷம்மு. தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிட்டு 6.5 லட்சம் follower களை பெற்றுள்ளார்.

    இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்க முயல்வதாக எச்சரிக்கை பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் தன்னிடம் மேக்கப் கலைஞராக பணிபுரிந்த உமா என்கிற நபர் இன்ஸ்டாகிராம் மெசஞ்சர் மூலம் தொடர்பு கொண்டதாகவும், தனது ஃபேஸ்புக் கணக்கை புதிய மொபைல் இல் ஓபன் செய்ய முடியாத காரணத்தினால், இ-மெயில் அக்கவுண்டை இன்ஸ்டாகிராமில் இணைத்துக் கொள்ளுமாறு உதவி கேட்டதாக ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார்.

    Also read : கரூர் மாநகராட்சியில் பீஸ்ட் வெளியாகாது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    இதற்கு காரணம் பேஸ்புக் அக்கவுண்டை புதிதாக மொபைலில் ஒபன் செய்வதற்கு பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய கட்டுப்பாடுகளை பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் பேஸ்புக் கணக்கை ஓபன் செய்யும் நபரின் மெயில் அக்கவுண்டிற்கு code ஒன்று அனுப்பப்படும். அதை பயன்படுத்தினால் மட்டுமே பேஸ்புக் கணக்கை ஓபன் செய்ய முடியும். அந்த அடிப்படையில் தனது மெயில் அக்கவுண்ட் இணைத்துக் கொள்ளுமாறு உமா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெயில் கணக்கை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அவ்வாறு மெயிலை இணைத்துக்கொண்டு மொபைலுக்கு வரும் code யை அனுப்புமாறு கேட்ட்தாக ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ,உறவினர்கள் மூலம் இந்த நடைமுறையை பயன்படுத்தி பேஸ்புக் கணக்கை ஓபன் செய்து கொள்ளலாமே என கேட்டதாகவும் நடிகை ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார். அதன் பிறகுதான் விசாரணை செய்தபோது தனது மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருந்த உமா இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை மோசடிக் கும்பல் ஹேக் செய்தது தெரியவந்ததாக ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார்

    இவ்வாறு நண்பர்களோ தெரியாதவர்களும் பேஸ்புக் கணக்கை ஓபன் செய்ய உதவுமாறு கூறி தங்கள் மெயில் கணக்கை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைத்துக்கொள்ள கேட்பவர்களை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் மோசடிக் கும்பலை நம்பி மெயில் கணக்கை இன்ஸ்டாகிராமில் இணைத்துக் கொண்டால் உங்களது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ஹேக் செய்து கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.

    அவ்வாறு எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் போட்டோக்கள்,வீடியோக்கள் உள்ளிட்டவற்றை அபகரித்தும், சமூக வலைதள கணக்கை தவறாக பயன்படுத்த மிரட்ட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்று மெயில் கணக்கை இணைத்துக் கொண்டு பலரும் தங்களது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை இழந்துள்ளதாகவும் பாதிப்புக்கு உள்ளானதாகவும் நடிகை ஷாலு ஷம்மு தனது எச்சரிக்கை பதிவில் தெரிவித்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Actress Shalu Shamu

    அடுத்த செய்தி