முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கட்டிட காண்டிராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் நீதிமன்றத்தில் ஆஜர்

கட்டிட காண்டிராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் நீதிமன்றத்தில் ஆஜர்

சந்தானம்

சந்தானம்

Actor Santhanam case : ஏற்கனவே நடிகர் சந்தானம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் இன்று மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கட்டிட காண்ட்ராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

தமிழ் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து தற்போது கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். அவருக்கு சொந்தமான இடத்தில் பெரிய கட்டிடம் கட்டுவதற்காக ஒரு பெரிய தொகையை கட்டிட காண்டிராக்டர் சண்முகசுந்தரத்திடம், நடிகர் சந்தானம் கொடுத்ததாகவும் ஆனால் சில காரணங்களால் அந்த பணி நின்று போனதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, தான் கொடுத்த பணத்தை நடிகர் சந்தானம் கேட்டபோது பணத்தை தராமல் இழுத்து அடித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு வளசரவாக்கத்தில் உள்ள கட்டிட காண்ட்ராக்டரின் அலுவலகத்தில் தனது மானேஜருடன் சென்று பணத்தை கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது.

விளம்பரப் படங்களில் நடிக்கப் போகும் அமிதாப் பச்சனின் பேத்தி… முன்னணி நடிகைகள் வாழ்த்து

இதில் மாறி, மாறி தாக்கி கொண்டதில் கட்டிட காண்ட்ராக்டர் மற்றும் நடிகர் சந்தானம் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே நடிகர் சந்தானம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் இன்று மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நிர்வாண காட்சியில் நடித்தது ஏன்? இரவின் நிழல் பட நடிகை பிரிகிடா விளக்கம்

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மீண்டும் இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் சந்தானம் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

First published:

Tags: Actor Santhanam