ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

காதலர் தினத்திலும் காப்பியா... அட்லீயைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

காதலர் தினத்திலும் காப்பியா... அட்லீயைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

தனது மனைவியுடன் இயக்குநர் அட்லீ

தனது மனைவியுடன் இயக்குநர் அட்லீ

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  காதலர் தினத்தன்று அட்லீ வெளியிட்ட புகைப்படம் நெட்டிசன்களின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

  தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநரான சங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அட்லீ, ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குநரானார். முதல் படமே மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தாலும் ராஜா ராணி திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் படத்தின் கதையோடு ஒத்துப்போவதாக விமர்சனங்கள் எழுந்தன.

  இதையடுத்து தெறி படம் சத்ரியன் விஜயகாந்தின் சத்ரியன் கதைதான் என்றும் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் கூறப்பட்டன. மெர்சல் திரைப்படம் வெளியான போது அப்படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதைக் கருவோடு ஒத்துப் போவதாக புகார் எழுந்தது.

  மூன்றாவதாக பிகில் திரைப்படம் ஆரம்பிக்கப்பட்ட போது அத்திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று கூறி குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா நீதிமன்றம் சென்றார். இதையடுத்து அட்லீ கதையைக் காப்பியடித்து படம் எடுக்கிறார் என்று சமூகவலைதளவாசிகள் கருத்து பதிவிட்டனர்.

  இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு தனது மனைவி பிரியாவுடன் அட்லீ எடுத்துக் கொண்ட புகைப்படமும், இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது மனைவியுடன் 2017-ம் ஆண்டு எடுத்த புகைப்படமும் ஒரே மாதிரி இருப்பதாக தெரிவித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
   
  View this post on Instagram
   

  This is us after an hour of sleep. The energy levels are clearly poles apart #SheMakesTravellingFun


  A post shared by Rohit Sharma (@rohitsharma45) on  மேலும் படிக்க: விஜய்யின் ‘மாஸ்டர்’ஆல்பத்தை வெளியிட்ட படக்குழு!

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Atlee