இயக்குநர் அட்லீயின் சமீபத்திய ட்வீட் விஜய் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய மூன்று பிளாக்பஸ்டர் படங்களை வழங்கியவர் இயக்குநர் அட்லீ. இந்தத் திறமையான இயக்குனர் விஜய்யை ஒவ்வொரு ரசிகரும் பார்க்க விரும்பும் விதத்தில் கச்சிதமான உணர்வுகளின் மூலம் மூன்று படங்களையும் வெற்றிப் படங்களாக மாற்றினார். இதற்கிடையே, அட்லீயின் சமீபத்திய ட்வீட், அவர் விஜய்யுடன் மீண்டும் இணைவது குறித்த யூகங்களை எழுப்பியுள்ளது.
'பிகில்' படத்தில் விஜய்யின் ராயப்பன் கதாபாத்திரம் மிகவும் பிரபலமான ஒன்று. அதில் விஜய்யின் வயதான கேங்ஸ்டர் கதாபாத்திரம் பல ரசிகர்களைக் கவர்ந்தது. மேலும், ராயப்பன் கேரக்டரைப் பற்றியும், அவர் எப்படி கேங்ஸ்டராக மாறினார் என்பதையும் தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
நீங்கள் யாருடைய மகன் என்ற கேள்விக்கு வனிதா விஜயகுமார் மகன் கூறிய பதில்
இந்நிலையில் ராயப்பனை மட்டும் மையப்படுத்தி ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என அமேசான் ப்ரைம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு ’செஞ்சிட்டா போச்சு’ என ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் அட்லீ.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதையடுத்து மீண்டும் விஜய் - அட்லீ இணைய வாய்ப்பிருப்பதாக விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.