• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மணி ஹெய்ஸ்ட் சாயலில் ஷாருக்கான் படத்தை எடுக்கும் அட்லி?

மணி ஹெய்ஸ்ட் சாயலில் ஷாருக்கான் படத்தை எடுக்கும் அட்லி?

அட்லீ - ஷாருக்கான்

அட்லீ - ஷாருக்கான்

பாதிக்கப்பட்ட பெண்களாக நயன்தாரா, ப்ரியாமணி, சானியா மல்கோத்ரா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

  • Share this:
    அட்லி படம் இயக்குகிறார் என்றால் முதலில் ரசிகர்கள் கேட்கும் கேள்வி, எந்தப் படத்தின் இன்ஸ்பிரேஷன்? அட்லியின் முந்தையப் படங்கள் ஏற்கனவே வெளியான படங்களின் சாயலை கொண்டிருந்ததால் இந்தக் கேள்வி.

    ஷாருக்கானை வைத்து அவர் இயக்கும் படம் விஜயகாந்த் இரு வேடங்களில் நடித்த படத்தின் தழுவல் என சொல்லப்பட்டது. ஷாருக்கான் இரு வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒருவர் ராணுவ வீரர் எனவும் கூறினார்கள். தற்போது வேறொரு தகவல் வெளியாகியுள்ளது.

    பாதிக்கப்பட்ட நான்கு பெண்களுக்காக நாயகன் ஷாருக், யாராலும் செய்ய முடியாத திருட்டு ஒன்றை செய்து பழிவாங்குவதுதான் படத்தின் கதை என மும்பை மீடியாக்கள் தகவல் கசியவிட்டுள்ளன. பிரபல வெப் தொடரான மணி ஹெய்ஸ்டின் விறுவிறுப்பும், நானியின் கேங்லீடர் படத்தின் சாயலும் கொண்ட படம் இது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    நானியின் கேங்லீடர் திரைப்படத்தில், ஒரு திருட்டால் பாதிக்கப்படும் நான்கு பெண்கள், அந்த திருட்டை நடத்தியவனை பழிவாங்க ஒரு க்ரைம் கதை எழுத்தாளான் உதவியை நாடுகின்றனர். அவனுடன் இணைந்து எப்படி சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடித்து பழிவாங்குகிறார்கள் என்பது கதை. இந்த கதையும்கூட 2018-ல் ஹாலிவுட்டில் வெளிவந்த விடோவ்ஸ் திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷனில் எடுக்கப்பட்டதே. ஷாருக்கான் படத்தில் பாதிக்கப்பட்ட பெண்களாக நயன்தாரா, ப்ரியாமணி, சானியா மல்கோத்ரா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அட்லி படம் வெளிவரும்வரை இதுபோன்று இன்னும் பல கதைகள் சொல்லப்படும். ஒருமுறை காப்பி இமேஜ் விழுந்தால் இதுதான் நிலைமை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: