ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஷாருக்கானால் சென்னையில் பயனடைந்த 1000 குடும்பங்கள் - அட்லீ சொன்ன தகவல்!

ஷாருக்கானால் சென்னையில் பயனடைந்த 1000 குடும்பங்கள் - அட்லீ சொன்ன தகவல்!

ஷாரூக்கான் , விஜய்யுடன் அட்லீ

ஷாரூக்கான் , விஜய்யுடன் அட்லீ

கடந்த ஒரு மாதமாக ஜவான் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடத்தப்பட்டது. அப்போது தளபதி விஜய், ஷாருக்கான், அட்லி உள்ளிட்டோர் ஜவான் படம் குறித்து நீண்ட நேரம் பேசியுள்ளனர்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ‘ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றதால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பலன் அடைந்தன’ என்று படத்தின் இயக்குனர் அட்லி நன்றியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அட்லி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

  சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. ஜவானின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இதன் தொடர்ச்சியாக மாமல்லபுரத்தில் நடைபெற்ற நயன்தாராவின் திருமண நிகழ்ச்சியில், ஷாருக்கான் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி இருந்தார்.

  ஃப்ளையிங் கிஸ்! மழையில் டான்ஸ் - வேற லெவல் குஷியில் ஜிபி முத்து! கலகல பிக்பாஸ் ப்ரோமோ!

  இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஜவான் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடத்தப்பட்டது. அப்போது தளபதி விஜய், ஷாருக்கான், அட்லி உள்ளிட்டோர் ஜவான் படம் குறித்து நீண்ட நேரம் பேசியுள்ளனர்.

  இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் நடித்துள்ளார் என்ற ஒரு தகவலும் வெளிவந்துள்ளது. ஆனால் இதனை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை. இதேபோன்று அட்லியின் பிறந்தநாள் விழாவில் விஜய்யும், ஷாருக்கானும் நேரில் பங்கேற்று அவரை வாழ்த்தினர்.

  இவங்க தான் அடுத்த க்ரஷ் போல! பிக்பாஸ் குயின்சியின் க்யூட் போட்டோஸ்..

  இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில் 30 நாட்கள் சென்னை ஷூட்டிங்கை முடித்தது தொடர்பாக, ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அவர் தனது பதிவில், ‘என்ன அழகான 30 நாட்கள் ஷூட்டிங் சென்னையில் நடந்தது!! தலைவர் ரஜினிகாந்த் எங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததை, ஆசீர்வாதமாய் உணர்கிறேன். நயன்தாராவுடன் நடித்தது, அனிருத்துடன் பார்ட்டி கொண்டாட்டம், விஜய் சேதுபதியுடன் நீண்டநேர கருத்துப் பரிமாற்றம், தளபதி விஜய் எனக்கு அளித்த சுவையான உணவு இவற்றை மறக்க முடியாது. எனக்கு நல்ல வரவேற்பு அளித்த அட்லீ மற்றும் பிரியாவிற்கு நன்றி. இப்போது சிக்கன் 65 ரெசிபியை சமைக்க கற்றுக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

  இதற்கு பதிலளித்துள்ள அட்லி, ‘நன்றி சார். உங்களை சென்னையில் வரவேற்றதை கௌரவமாக கருதுகிறேன். எனது கெரியரில் மறக்க முடியாத நாளாக ஜவான் சென்னை ஷெடூல் அமைந்துவிட்டது. சென்னையில் ஷூட்டிங்கை நடத்தியதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பலன் பெற்றார்கள். இதற்காக மிக்க நன்றி சார். நீங்கள் என்றைக்குமே ராஜாதான். உங்கள் குணத்திற்கு தலை வணங்குகிறேன். விரைவில் உங்களை மும்பையில் சந்திக்கிறேன் சார்’ என்று கூறியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Atlee