Atlee: அட்லீ - ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

அட்லீ - ஷாருக்கான்

கடந்த 2019-ம் ஆண்டு, நடிகர் ஷாருக் கான் சென்னையில் உள்ள அட்லீ அலுவலகத்திற்கு சென்றதிலிருந்து, இவர்கள் இணையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன.

  • Share this:
    பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்குநர் அட்லீ இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இயக்குனர் அட்லீ, பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானை இயக்கத் தயாராகிவிட்டது அனைவரும் அறிந்ததே. இந்த செய்தி ஓரிரு ஆண்டுகளாக தமிழ் சினிமா வட்டாரத்தில் வலம் வருகிறது. இந்தப் படம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருக்கிறோம். இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டில் தொடங்கப்படும் என்று கருதப்பட்டாலும், சமீபத்திய தகவல்கள் படம் டிசம்பரில் மட்டுமே தொடங்கப்படுவதாகக் கூறுகின்றன.

    2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு, நடிகர் ஷாருக் கான் சென்னையில் உள்ள அட்லீ அலுவலகத்திற்கு சென்றதிலிருந்து, இவர்கள் இணையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன. அதோடு தளபதி விஜய்யுடன் 'தெறி', ‘மெர்சல், ‘பிகில்’ ஆகியப் படங்களில் அவர் செய்த மந்திரத்தை ஷாருக்கானுடனும் செய்வாரா என எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

    ஷாரூக் கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இது இன்னும் சில மாதங்களில் முடிவடையும். அதன் பிறகு அவர், இயக்குனர் அட்லீயுடனான படத்தை தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: