• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Atlee-Shahrukh Khan: ஆகஸ்டில் தொடங்கும் அட்லீ - ஷாருக் கான் திரைப்படம்!

Atlee-Shahrukh Khan: ஆகஸ்டில் தொடங்கும் அட்லீ - ஷாருக் கான் திரைப்படம்!

அட்லீ - ஷாருக்கான்

அட்லீ - ஷாருக்கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்குநர் அட்லீ இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  • Share this:
    பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்குநர் அட்லீ இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    இயக்குனர் அட்லீ பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானை இயக்கத் தயாராகிவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இது குறித்த தகவல் கடந்த 2 வருடங்களாக வலம் வருகிறது. இந்தப் படம் கைவிடப்பட்டதாக யூகங்கள் எழுந்த நிலையில், இப்படம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Uma Sethuraman: ’நீங்க கதவை தட்டுவீங்கன்னு காத்துட்டு இருக்கேன்’ – மறைந்த நடிகர் சேதுவின் மனைவி உருக்கம்

    தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதானின் படப்பிடிப்பில் இருக்கும் ஷாருக்கான், அட்லீ படத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறாராம். 2021 ஆகஸ்டில் தொடங்கவுள்ள இந்தப் படத்தின் முந்தைய தயாரிப்பு வேலைகளில் மும்முரமாக உள்ளாராம் அட்லீ.

    ஷாருக் கான் 2019-ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள அட்லீ அலுவலகத்திற்கு சென்றதிலிருந்து, இந்தப் படத்தைப் பற்றிய சலசலப்பு இன்னும் ஓயவில்லை. இதற்கிடையே விஜய்யின் 66-வது படத்தை இயக்குபவர்களின் பட்டியலில் அட்லீயின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஒருவேளை இது உண்மையானால், விஜய் - அட்லீ இணையும் 4-வது படமாக அது இருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: