பிகில் படத்தின் வீடியோவை வெளியிட்ட இயக்குநர் அட்லி

பிகில் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிகில் படத்தின் வீடியோவை வெளியிட்ட இயக்குநர் அட்லி
பிகில் படம் வெளியாகும் போது அனைத்து ஸ்கிரினுலும் பிகில் படம் மட்டுமே திரையிடப்படும் என்று ரோஹினி திரையரங்கம் கூறியுள்ளது
  • News18
  • Last Updated: October 8, 2019, 8:10 AM IST
  • Share this:
இயக்குநர் அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகில் படத்திற்கான பின்னணி இசை சேர்க்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்

அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படம் தீபாவளியன்று பிரமாண்டமாக வெளியாக உள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை - மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பிகில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது இயக்குநர் அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகில் படத்திற்கான பின்னணி இசை சேர்க்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்


 
View this post on Instagram
 

#Bigil #whistle BGM work #Macedonia string session on......... @arrahman sir ❤️❤️❤️🎼🎼🎼


A post shared by Atlee (@atlee47) on


Also watch

First published: October 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading