இயக்குனர் அட்லி ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் புனேயில் தொடங்கியது. ஷாருக்கானின் மகன் போதைப்பொருள் உபயோகப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அட்லியின் சமூக வலைத்தள பதிவு,அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கலாம் என்ற யூகத்தை கிளப்பியுள்ளது.
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனரான அட்லி தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை விஜய்யை வைத்து இயக்கினார். அதிக செலவு வைக்கிறார், எடுக்கிற காட்சிகளில் பலதையும் பயன்படுத்துவதில்லை, பழைய படங்களை காப்பியடிக்கிறார் என அட்லி மீது நிறைய புகார்கள் கூறப்பட்டாலும், விஜய்யின் மார்க்கெட்டை விஸ்தரித்ததில் அட்லியின் படங்களுக்கு முக்கிய பங்குண்டு. அதனால் தொடர்ச்சியாக
அட்லீக்கு விஜய் வாய்ப்பு வழங்கி வருகிறார்.
இதையும் படிங்க.. தளபதி 66-ல் விஜய்க்கு வில்லனாகும் அஜித் வில்லன்?
கடைசியாக வெளியான பிகில் படத்திற்கு பிறகு ஷாருக்கானை வைத்து அட்லீ படம் இயக்குவதாக கூறப்பட்டது. அதனை வதந்தி என பலரும் நினைத்திருந்த நேரத்தில் அதனை உண்மையாக்கினார் அட்லி. தொடர் தோல்விகளில் இருந்த ஷாருக்கான் அட்லியை இயக்குனராக தேர்வு செய்ததை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இவர்கள் இணையும் படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கியது. நயன்தாரா, ப்ரியாமணி ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஆனால் முதல் ஷெட்யூல்டுடன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஷாருக்கானின் மகன் போதை மருந்து உபயோகித்த வழக்கில் கைது செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறினர். இந்நிலையில் அட்லி சமூகவலைதளத்தில் போட்டிருக்கும் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"சிலர் உங்களை ஏன் தவறாக நடத்தினார்கள் என்று வருத்தப்படும் காலம் உங்கள் வாழ்க்கையில் வரும். என்னை நம்புங்கள், அது கண்டிப்பாக வரும்" என்று அந்தப் பதிவில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷாருக்கானை குறித்து அவர் போட்டபதிவு இது என சிலர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க..தளபதி 66-ல் விஜய்க்கு வில்லனாகும் அஜித் வில்லன்?
சினிமாவில் இதே போன்ற நாலுவரி வார்த்தைகளை வைத்து வரலாறு எழுதுவது சகஜம். எனினும் அட்லி ஏன் இப்போது இப்படி ஒரு பதிவை போட்டார் என்பது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.