தன்னை தவறாக வழி நடத்தியவர்கள் ஒருநாள் வருத்தப்படுவார்கள் என இயக்குநர் அட்லீ இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாவர் அட்லீ. முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். இதையடுத்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகியப் படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து, அட்லீ தனது அடுத்தப்படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்த தகவல் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக வலம் வருகிறது. இந்தப் படம் கைவிடப்பட்டதாக யூகங்கள் எழுந்த நிலையில், படம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
சென்னை மேயர் பிரியா ராஜனை கோயிலில் சந்தித்த நயன்தாரா விக்னேஷ் சிவன்!
அதோடு கதையில் சில மாற்றங்கள் செய்ய சொல்லி ஷாருக்கான் கேட்டதாகவும், அதை அட்லீ செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்தப் படம் எப்போது தொடங்கும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அட்லீ ரசிகர்கள்.
நடிகர் தனுஷின் பிரமாண்ட வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் இதோ...
இந்நிலையில் ”சிலர் உங்களை ஏன் தவறாக நடத்தினார்கள் என்று வருத்தப்படும் காலம் உங்களது வாழ்வில் வரும். என்னை நம்புங்கள் கண்டிப்பாக வரும்” என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அட்லீ. அவர் மறைமுகமாக ஷாருக்கானை குறிப்பிட்டாரா இல்லை வேறு யாரையும் மறைமுகமாக தாக்கியுள்ளாரா என குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.