Home /News /entertainment /

மீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி..?

மீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி..?

அட்லீ - விஜய்

அட்லீ - விஜய்

மீண்டும் விஜய், அட்லி இயக்கத்தில் நடிக்கலாம், பிகிலை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே படத்தை தயாரிக்கலாம் என்கின்றன செய்திகள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லி மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை இயக்கலாம் என்கின்றன செய்திகள்.

அதிக பட்ஜெட், ஆடம்பரமாக செலவு செய்கிறார் என ஆயிரம் குறைகள் கூறினாலும் விஜய் படங்களின் பட்ஜெட்டையும், வியாபாரத்தையும் உயர்த்தியதில் அட்லியின் பங்கு முக்கியமானது. விஜய்யும், அட்லியும் இணைந்த மூன்று படங்களுமே ஹிட். விஜய்யின் சினிமா கரியரில் ஒரு இயக்குனர் தொடர்ச்சியாக தனது மூன்று படங்களை விஜய்யை வைத்து இயக்கியதில்லை. இந்தப் பெருமைக்குரிய கூட்டணி மீண்டும் ஒன்றிணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் தற்போது தனது 65-வது படமான பீஸ்டில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கி வருகிறார். சமீபத்தில் இதன் 100 வது நாள் படப்பிடிப்பை படக்குழு கொண்டாடியது. அடுத்து தனது 66-வது படத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். தில் ராஜு படத்தை தயாரிக்கிறார். ஆக்ஷன் படங்களில் தொடர்ச்சியாக விஜய்யை பார்த்து வந்தவர்களுக்கு இந்தப் படம் வித்தியாசமாக அமையும். உணர்வுப்பூர்வமான கதையாம் இந்தப் படம்.

இதையடுத்து தனது 67-வது படத்தில் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அட்லி இயக்கத்தில் நடிக்கலாம், பிகிலை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே படத்தை தயாரிக்கலாம் என்கின்றன செய்திகள்.

அட்லி தற்போது ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அதற்கடுத்து அவர் இயக்கும் படம் விஜய் படமாக இருக்கும் என்கிறது கோடம்பாக்க தகவல்கள்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Atlee, Thalapathy vijay

அடுத்த செய்தி