இந்த 2023-ம் வருடம் தனக்கு இரண்டு ரிலீஸ் இருப்பதாக ட்விட்டரில் அறிவித்திருக்கிறார் இயக்குநர் அட்லீ.
பிரபல திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா மோகன் ஆகியோர் தங்களின் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த ஜோடி, கடந்த டிசம்பரில், இந்த மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்தனர். அவர்கள் வெளியிட்ட புகைப்படங்களும் ரசிகர்களின் மனங்களை வென்றது.
”நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் அனைவரின் ஆசியும் அன்பும் வேண்டும். அன்புடன் அட்லீ மற்றும் பிரியா” என்ற அவர்களின் இன்ஸ்டகிராம் பதிவு 5 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும் பல பிரபலங்களின் வாழ்த்துகளையும் பெற்றது.
இதையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரியில் தானும், தனது மனைவி பிரியாவும் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அட்லீ ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ட்விட்டரில், அவர் தனது குழந்தை மற்றும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான் படத்தின் ரிலீஸ் குறித்து, புத்தாண்டு வாழ்த்துக்களுடன் தெரிவித்துள்ளார்.
Happy New Year 2023 everyone!
God Willing, we will be blessed with two releases this year 🥳🤩
Expecting Release one in February 👶🏻 ❤️
Release two on June 2 - #Jawan 🎥 ❤️
— atlee (@Atlee_dir) January 1, 2023
வாரிசு ஆடியோ லாஞ்சில் விஜய் மனைவி சங்கீதா ஏன் கலந்துக் கொள்ளவில்லை தெரியுமா?
“அனைவருக்கும் 2023 புத்தாண்டு வாழ்த்துக்கள்! கடவுள் அருளால், இந்த ஆண்டு இரண்டு வெளியீடுகளால் நாங்கள் ஆசீர்வதிக்கப்படுவோம். பிப்ரவரியில் ஒன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 2-ம் தேதி இரண்டாவது ரிலீஸ் - #ஜவான்” என்று அட்லீ தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார். இதையடுத்து 2023-ம் ஆண்டை ஸ்பெஷலாக கொண்டாடவிருக்கும் அட்லீ - பிரியா தம்பதிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Atlee