இது ரொம்ப மோசம்ங்க - புகார் செய்த அதுல்யா ரவி

இது ரொம்ப மோசம்ங்க - புகார் செய்த அதுல்யா ரவி

நடிகை அதுல்யா ரவி

சமூகவலைதளத்தில் திரைபிரபலங்களின் பெயரில் போலி அக்கவுண்ட் ஆரம்பிப்பது, விளம்பரம் செய்வது இந்த கரோனா காலத்தில் அதிகரித்துள்ளது.

 • Share this:
  சமீபத்தில் விஷ்ணு விஷால் படத்தில் நடிக்க நடிகர்கள் தேவை என்று ஒரு விளம்பரம் வெளியானது. அது போலியான விளம்பரம் என விஷ்ணு விஷால் எச்சரித்தார். அதனைத் தொடர்ந்து, சிபி ராஜ் நடிக்கும் படத்துக்கு நாயகி தேவை என்று விளம்பரம் செய்தனர். அப்படியொரு படமே நான் நடிக்கலையே என்று கடுப்பான சிபி, போலி விளம்பரம், யாரும் ஏமாற வேண்டாம் என்று எச்சரித்தார். அந்த பிரச்சனை அடங்குவதற்குள் அடுத்த போலி. இந்தமுறை மாட்டியவர் அதுல்யா ரவி.

  ஏமாலி, அடுத்தசாட்டை படங்களில் நடித்திருக்கும் அதுல்யா ரவி தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இவர் ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் தனது பெயரில் அக்கவுண்ட் வைத்துள்ளார். தற்போது புதிதாக பேஸ்புக்கில் அக்கவுண்ட் தொடங்கி, திரைபிரபலங்களுக்கு தனிப்பட்டமுறையில் செய்தி அனுப்பியிருக்கிறார். அவர்கள் அதுல்யா ரவியை தொடர்பு கொண்ட பிறகே, தனது பெயரில் யாரோ போலி அக்கவுண்ட் தொடங்கி திரைபிரபலங்களுக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பியது அவருக்கு தெரிய வந்தது.

  என் பெயரில் யாரோ போலி அக்கவுண்ட் தொடங்கி, எனக்கு தெரிந்த திரை பிரபலங்களுக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்புகிறார்கள். இது ரொம்ப மோசமான செயல். இதுபற்றி புகார் அளித்துள்ளேன். நான் பேஸ்புக்கிலேயே இல்லை என்று அதுல்யா ரவி எச்சரித்துள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: