ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

டிசம்பர் வெளியீட்டிலிருந்து விலகிய குருதி ஆட்டம்...!

டிசம்பர் வெளியீட்டிலிருந்து விலகிய குருதி ஆட்டம்...!

குருதி ஆட்டம்

குருதி ஆட்டம்

குருதி ஆட்டம் படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியமான வேடங்களில் வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அதர்வா நடித்திருக்கும் குருதி ஆட்டம் டிசம்பர் 24 வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் வெளியீடு தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

8 தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் படம் குருதி ஆட்டம். பரதேசி, இமைக்கா நொடிகள் தவிர எந்த ஹிட்டும் இல்லாத அதர்வா குருதி ஆட்டத்தை பெரிதும் நம்பி இருந்தார். கிறிஸ்துமஸ் படங்களில் முதலில் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இந்தப் படம்தான்.

தற்போது என்ன காரணமோ தெரியவில்லை, டிசம்பர் 24 வெளியீட்டிலிருந்து படம் தள்ளிப் போகிறது. அதற்குப் பதில் 2022 ஜனவரியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

குருதி ஆட்டம் படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியமான வேடங்களில் வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரித்துள்ளது.

சமீபத்தில் பட வெளியீடு தள்ளிப் போவது சகஜமாகி வருகிறது. ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், பார்டர், தள்ளிப்போகாதே, முருங்கைக்காய் சிப்ஸ், என்ன சொல்ல போகிறாய், ஆன்டி இண்டியன் என வெளியீடு தள்ளிப்போன படங்கள் மட்டும் ஒரு டஜனுக்கு மேல் இருக்கும். இதில் சில வெளிவந்துவிட்டன.

Also read... மண்டேலா இயக்குனரின் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

எம்ஜிஆர் மகன் போன்றவை ஓடிடியில் வெளியானது. என்ன சொல்ல போகிறாய் போல பல படங்கள் இன்னும் வெளியாகாமலே உள்ளன. குருதி ஆட்டம் இதில் எந்த வகையில் சேரப்போகிறது என்று தெரியவில்லை.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Atharvaa