Home /News /entertainment /

Trigger First Glimpse | சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ட்ரிகர்!

Trigger First Glimpse | சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ட்ரிகர்!

ட்ரிக்கர் படம்

ட்ரிக்கர் படம்

படத்தின் வசனத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் எழுதியுள்ளார்.

டார்லிங், எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, 100, கூர்க்கா படங்களை இயக்கிய சாம் ஆன்டனின் அடுத்தப் படத்துக்கு ட்ரிகர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதர்வா இதில் நாயகனாக நடிக்கிறார்.

ட்ரிகர் ஆக்ஷன் படமாக தயாராகிறது. படத்தின் டைட்டிலுடன் படத்தின் முதல் முன்னோட்ட டீஸரையும் வெளியிட்டுள்ளனர். அப்பாவுக்காக மகன் பழிவாங்கும் கதை என இந்த முன்னோட்ட டீஸர் சொல்கிறது. இதில் அதர்வாவின் அப்பாவாக அருண் பாண்டியன் நடிக்கிறார். நாயகியாக தான்யா நடிக்கிறார்.

Also Read : விஜய் டிவியின் மிகப் பெரிய ஹிட் சீரியலின் 2வது பாகம் தயார்! ஹீரோ ஹீரோயின் இவர்கள் தான்

இவர்கள் தவிர  சீதா, முனிஷ்காந்த், சின்னி ஜெயந்த் உள்பட பலர் நடிக்கின்றனர். கதைப்படி அதர்வாவின் அண்ணன் கதாபாத்திரம் படத்தில் முதன்மையாக வருகிறது. அந்த வேடத்தில் கிருஷ்ணா நடிக்கிறார். அவரது மனைவியாக வினோதினி வருகிறார். அதர்வாவின் அம்மா வேடத்தில் சீதா நடிப்பதாக கூறப்படுகிறது.
முனிஷ்காந்த், சின்னி ஜெயந்த், அன்புதாசன், நிஷா ஆகியோர் படத்தில் காமெடி போலீசாக வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு பாடலும் படத்தில் வைத்திருக்கிறார்கள். பிரமோத் பிலிம்ஸும், மிராகிள் மூவிஸும் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் வசனத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் எழுதியுள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு. ஜிப்ரான் படத்துக்கு இசையமைக்கிறார்.

Also Read : ஹோட்டல் பொருட்களை காணவில்லை - மீரா மிதுன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

படம் ஏறக்குறைய முடிந்த நிலையில் விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Atharvaa

அடுத்த செய்தி