முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அதர்வா, சரத்குமார் நடிப்பில் நிறங்கள் மூன்று... 72 லட்சம் பார்வைகளைக் கடந்த ட்ரைலர்

அதர்வா, சரத்குமார் நடிப்பில் நிறங்கள் மூன்று... 72 லட்சம் பார்வைகளைக் கடந்த ட்ரைலர்

நிறங்கள் மூன்று

நிறங்கள் மூன்று

ஐயங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்கள் முன்பு வெளியானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதர்வாவின் நிறங்கள் மூன்று படத்தின் டிரைலர் 72 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. 

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் நரேன். இதையடுத்து ‘மாஃபியா’, ‘மாறன்’ படங்களை ஆகியப் இயக்கினார். கார்த்திக் இயக்கிய நரகாசூரன் படம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் உள்ளது.

தற்போது அவர் நடிகர் அதர்வாவை வைத்து ‘நிறங்கள் மூன்று’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ரகுமான், சரத்குமார், நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். ஐயங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்கள் முன்பு வெளியானது.

' isDesktop="true" id="905099" youtubeid="cWxRqFy6DhE" category="cinema">

சினிமா ஆசை கொண்ட ஒருவன், ஊழல் செய்யும் காவல் துறை அதிகாரி, மாணவர் மூவரையும் மையப்படுத்தி இந்த டிரைலர் உருவாகியுள்ளது. ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையாக நிறங்கள் மூன்று படம் உருவாகியிருப்பதாக தெரிகிறது.  சில தினங்கள் முன்பு வெளியான இந்த டிரைலர் தற்போது வரை 7.2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Atharvaa