• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த அதர்வாவின் குருதி ஆட்டம்

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த அதர்வாவின் குருதி ஆட்டம்

குருதி ஆட்டம்

குருதி ஆட்டம்

இந்த வருடம் அதர்வா நடித்திருக்கும் குருதி ஆட்டம் திரைப்படம் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

  • Share this:
டிசம்பரில் அதர்வா நடித்துள்ள இரு படங்கள் திரைக்கு வருகின்றன. தள்ளிப்போகாதே மற்றும் குருதி ஆட்டம். இதில் குருதி ஆட்டம் திரைப்படம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24-ம் தேதி வெளியாகிறது.

தீபாவளி, பொங்கலைப் போன்று கிறிஸ்மஸ் தமிழகத்தின் பெருவிழா அல்ல. கிறிஸ்மஸை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்ககள் பொதுவாக வெளியாவதில்லை. அதேநேரம், பிற நடிகர்களின் ஒன்றிரண்டு படங்களாவது கிறிஸ்மஸை முன்னிட்டு வெளியாகும். கிறிஸ்மஸை தொடர்ந்து வரும் விடுமுறையையும், புத்தாண்டு விடுமுறையையும் கணக்கில் கொண்டு டிசம்பர் இறுதியில் படத்தை வெளியிடுவார்கள். பொங்கலுக்கு பெரிய படங்களுடன் போட்டியிட விரும்பாதவர்களின் பாதுகாப்பான கிரவுண்ட் கிறிஸ்மஸ் வெளியீடு.

இந்த வருடம் அதர்வா நடித்திருக்கும் குருதி ஆட்டம் திரைப்படம் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் படம் பாணா காத்தாடி, பாலாவின் பரதேசி, இமைக்கா நொடிகள் என சில வெற்றிகளை தவிர அதர்வாவின் பிற படங்கள் லாபம் தந்ததில்லை. ஒரு வெற்றி கண்டிப்பாக தேவைப்படும் நிலையில் டிசம்பரில் இரு படங்கள் அவரது நடிப்பில் வெளியாகின்றன.

டிசம்பர் 3 வெளியாகும் தள்ளிப் போகாதே திரைப்படம் தெலுங்கில் வெற்றி பெற்ற நின்னுக்கோரி படத்தின் தமிழ் தழுவல். ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். அனுபாமா பரமேஸ்வரன் நாயகி. காதல் திரைப்படம். டிசம்பர் 24 வெளியாகும் குருதி ஆட்டம் ஆக்ஷன் திரைப்படம். 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷின் இரண்டாவது படம். முதுகில் ஏராளம் கத்தியுடன் கத்தி ஸ்டேன்ட் போல் அதர்வா நிற்கும் புகைப்படம் பயமுறுத்தினாலும், 8 தோட்டாக்களை இயக்கியவரின் படம் என்பதால் குருதி ஆட்டம் ஓடும் என்ற நம்பிக்கை  அனைவருக்கும் உள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை குருதி ஆட்டம் தொடங்கி வைத்திருக்கிறது. பொங்கலுக்கு வலிமையுடன் போட்டியிட விரும்பாத படங்கள் விரைவில் தங்களின் கிறிஸ்மஸ் வெளியீட்டை அறிவிக்கலாம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: