Home /News /entertainment /

அதர்வா ஜூனியர் கேப்டன்... பிரஸ்மீட்டில் பாராட்டி தள்ளிய சின்னி ஜெயந்த்!

அதர்வா ஜூனியர் கேப்டன்... பிரஸ்மீட்டில் பாராட்டி தள்ளிய சின்னி ஜெயந்த்!

ட்ரிகர் பிரஸ்மீட்

ட்ரிகர் பிரஸ்மீட்

ட்ரிகர் திரைப்படம் வெளியான பிறகு நடிகர் அதர்வாவை ஜூனியர் கேப்டன் என்று அழைப்பார்கள் என நடிகர் சின்னி ஜெயந்த் கூறியுள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ட்ரிகர் திரைப்படம் வெளியான பிறகு நடிகர் அதர்வாவை ஜூனியர் கேப்டன் என்று அழைப்பார்கள் என நடிகர் சின்னி ஜெயந்த் கூறியுள்ளார். 

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ட்ரிகர் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் அதர்வா, அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த், இயக்குனர் சாம் ஆண்டன் மற்றும் தயாரிப்பாளர் சுருதி நல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய சின்னி ஜெயந்த், 38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன், சில நல்ல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். அதில் மிகச் சிறந்த திரைப்படமாக ட்ரிகர் இருக்கும் எனக் கூறினார். அத்துடன் இந்த திரைப்படம் ஆங்கில படம் போல இருக்கும், சண்டை காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளன. தமிழ் சினிமாவில் 80 காலகட்டங்களில் கேப்டன் விஜயகாந்த் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோருடைய சண்டை காட்சிகள் எனக்குப் பிடிக்கும்.  அவ்வளவு நேர்த்தியாக சண்டைக் காட்சிகளில் நடிப்பார்கள். அந்த வகையில் தற்போது அதர்வாவை பிடித்திருக்கிறது.



உன் மாஸ்டர் பிளான் எனக்குத் தெரியும்... ரவீந்தருக்கு வனிதா விஜயக்குமார் கொடுத்த அட்வைஸ்!

ட்ரிகர் திரைப்படத்தில் நடித்த அதர்வாவை ஜூனியர் கேப்டன் என்று அழைக்கிறேன் எனக் கூறினார். அவருக்குப் பின் பேசிய இயக்குனர் சாம் ஆண்டன், அண்டர் கவர் போலீசில் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல் அதர்வா பேசுகையில், இது ஆக்சன் திரைப்படம் தான் ஆனால் அதைத் தாண்டி நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளன.  அருண்பாண்டியன் மிக சிறப்பாக நடித்துள்ளார் எனத் தெரிவித்தார். மேலும் இந்த திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்க மாறும் கேட்டுக்கொண்டார் அதர்வா.
Published by:Shalini C
First published:

Tags: Actor Atharvaa, Tamil Cinema

அடுத்த செய்தி