ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெளிநாடுகளை அழகா காட்டியிருக்கீங்க - அதர்வா படத்துக்கு கிடைத்த விருது!

வெளிநாடுகளை அழகா காட்டியிருக்கீங்க - அதர்வா படத்துக்கு கிடைத்த விருது!

தள்ளி போகாதே

தள்ளி போகாதே

படக்குழு சார்பில் நிர்வாக தயாரிப்பாளர் ஓம்சரண் கலந்துகொண்டு, பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசுவிடமிருந்து விருதை பெற்றார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அதர்வா நடிப்பில் வெளியான தள்ளிப் போகாதே படத்திற்கு வெளிநாடுகளை சிறப்பாக படம் பிடித்ததற்கான விருது கிடைத்துள்ளது.

  தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த நின்னுகோரி என்ற படத்தை தமிழில் தள்ளிப் போகாதே என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அந்தப் படத்தை ஆர்.கண்ணன் இயக்க அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

  இந்தப் படத்தை அஜர்பைஜான் உள்ளிட்ட வெளி நாடுகளில் படமாக்கியிருந்தனர். இந்த நிலையில் வெளி நாடுகளை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் படமாக்கிய படக்குழுவுக்கு Indian International Tourism Conclave Award அமைப்பு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.

  நவரச நாயகன் கார்த்திக் படத்தில் இணைந்த சன்னி லியோன்… படப்பிடிப்பு துவக்கம்…!

  அதில் தமிழில் கடந்த ஆண்டு வெளியான தள்ளிப்போகாதே படத்திற்கு விருது வழங்கியுள்ளனர். இதற்கான நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அதில் படக்குழு சார்பில் நிர்வாக தயாரிப்பாளர் ஓம்சரண் கலந்துகொண்டு, பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசுவிடமிருந்து விருதை பெற்றார்.

  என் கனவினில் வந்த காதலியே... ஹன்சிகாவின் ஆல் கியூட் ஆல்பம்!

  தள்ளிப் போகாதே படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஆனால் தற்போது வெளிநாடுகளை சிறப்பாக படமாக்கியதற்கு விருது கிடைத்துள்ளதால் படக்குழு சற்று மகிழ்ச்சில் உள்ளனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Atharvaa, Kollywood