ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘நல்ல கிராமத்து கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை பட்டத்து அரசன் மூலம் நிறைவேறியது‘ – நடிகர் அதர்வா பேச்சு

‘நல்ல கிராமத்து கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை பட்டத்து அரசன் மூலம் நிறைவேறியது‘ – நடிகர் அதர்வா பேச்சு

பட்டத்து அரசன் படக்குழுவினர்

பட்டத்து அரசன் படக்குழுவினர்

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ள "பட்டத்து அரசன்" படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நல்ல கிராமத்து கதைக் களத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை பட்டத்து அரசன் படத்தின் மூலம் நிறைவேறியதாக நடிகர் அதர்வா கூறியுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் லைக்கா தயாரிப்பில் அதர்வா,ராஜ்கிரண், ஹாசிக்கா  ரங்கனா உள்ளிட்டோர் நடிப்பில்,இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ள "பட்டத்து அரசன்" படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் நடிகர்கள் அதர்வா,ராஜ்கிரண், ஹாசிக்கா,சிங்கம்புலி,ஜெய பிரகாஷ், ஆர்.கே சுரேஷ் பாடலாசிரியர் விவேகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதில் நடிகர் அதர்வா பேசியதாவது-

குடும்ப பின்னணியில் ஒரு நல்ல கிராமத்து கதைகளத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை அது இந்த பட்டத்து அரசன் மூலமாக நிறைவேறி உள்ளது.ராஜ்கிரண் சார் இல்லை என்றால் இந்த படம் இல்லை பிறகு பண்ணிக்கலாம் என தான் படத்தில் நடித்த அனைவரும் நினைத்தோம்.

‘வாழை’ திரைப்படத்தின் ஷூட்டிங் தொடக்கவிழா ஃபோட்டோஸ்…

சிங்கம் புலி சாரிடம்  பேசலாம் அவரிடம் செல்லும்போதெல்லாம் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்,சாப்பிட பின் பேசலாம் என நினைத்து சென்றால் நாளை என்ன சாப்பிடலாம் என யோசித்துக்கொண்டு இருப்பார் என காமெடியாக கூறினார்.

நடிகர் ராஜ் கிரண் பேசுகையில், ‘இந்த படம் தமிழின் பாரம்பரியமான வீர விளையாட்டான கபடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ஒட்டுமொத்தமாக உலக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு எனவே கைகூப்பி இதனை கொண்டு செல்ல வேண்டுகிறேன்.’ என்றார்.

நடிகர் அப்பாஸிற்கு அறுவை சிகிச்சை… விரைவில் வீடு திரும்புவேன் என ஃபேஸ்புக்கில் பதிவு…

பாடலாசிரியர் விவேகா பேசும்போது, ‘இயக்குனர் சற்குணம் மீது தனி மரியாதை உண்டு, நடிகர் விமலின் இரண்டு படங்கள் தற்போது வரை மறக்க முடியாதவை, ஒன்று "களவாணி" மற்றொன்று வாகை சூடவா". அற்புதமான இயக்குனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் உடன் தொடர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி,துணிவு படத்திற்காக  பாடலை எழுதி உள்ளேன் அதை தொடர்ந்து இந்த படம். மிகப்பெரிய வெற்றி படமாக பட்டத்து அரசன் அமையும்.’ என்று தெரிவித்தார்.

Published by:Musthak
First published:

Tags: Kollywood