Home /News /entertainment /

அதர்வா நடிக்கும் ட்ரிக்கர் படத்தின் ட்ரெய்லர் வெளியானது…

அதர்வா நடிக்கும் ட்ரிக்கர் படத்தின் ட்ரெய்லர் வெளியானது…

ட்ரிக்கர் படத்தின் போஸ்டர்

ட்ரிக்கர் படத்தின் போஸ்டர்

ட்ரிக்கர் படத்திற்கு பிரபல இயக்குனர் பி.எஸ். மித்ரன் வசனம் எழுதியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அதர்வா நடிக்கும் ட்ரிக்கர் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் விருப்பத்தை பெற்று வருகிறது.

    அதர்வா நடிப்பில் கடைசியாக வெளிவந்த குருதி ஆட்டம் திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கியதால் எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது. இருப்பினும், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

    அதர்வாவின் அடுத்த படமான ட்ரிக்கர் வரும் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சன் ஜேனரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.



    கடத்தப்படும் 20 குழந்தைகளை போலீஸ் எப்படி மீட்கிறது என்பதே படத்தின் கதைக்களம். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக ட்ரிக்கர் படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழை அளித்துள்ளது.



    ட்ரிக்கர் படத்தில், அதர்வாவுடன் தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், சீதா, முனீஸ் காந்த், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெளியிடும் பணிகள் மும்முரம்… ஃபாரின் ரிலீசுக்கான வர்த்தகம் நிறைவு

    பிரமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ட்ரிக்கர் படத்திற்கு பிரபல இயக்குனர் பி.எஸ். மித்ரன் வசனம் எழுதியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Atharvaa

    அடுத்த செய்தி