Home /News /entertainment /

குரு சோமசுந்தரம் நடிப்புக்கு மோகன்லால் தந்த பரிசு..

குரு சோமசுந்தரம் நடிப்புக்கு மோகன்லால் தந்த பரிசு..

மின்னல் முரளி

மின்னல் முரளி

Minnal Murali : மின்னல் முரளியில் குரு சோமசுந்தரத்தின் நடிப்பைப் பார்த்தவர் மோகன் லால் தான் இயக்கும் பரோஸ் - நிதி காக்கும் பூதம் படத்தில் ஒரு வேடம் தந்திருக்கிறார்.

டொவினோ தாமஸ் நடிப்பில் பஷில் ஜோசப் இயக்கிய மின்னல் முரளி திரைப்படம் இந்திய அளவில் அதிக பார்வையாளர்களை சென்று சேர்ந்துள்ளது. அனைத்துமே நேர்மறை விமர்சனங்கள். படத்தில் அனைவரும் தவறாமல் குறிப்பிடும் விஷயம் குரு சோமசுந்தரத்தின் நடிப்பு.

ஆரண்ய காண்டம், ஜோக்கர் திரைப்படங்களை தவிர்த்து குரு சோமசுந்தரத்தை ஒழுங்கான முறையில் தமிழ் சினிமா பயன்படுத்தியிருக்கிறதா என்றால் இல்லை. ஆனால், முதல் மலையாளப் படமான மின்னல் முரளியில் தரமான வேடம் தந்திருக்கிறார்கள். எதிர்மறை நாயகன். டொவினோ தாமஸ் முதலில் இந்த வேடத்தைதான் கேட்டிருக்கிறார். கடைசியில் நாயகன் வேடம் அவருக்கு செல்ல, எதிர்நாயகனாக குரு சோமசுந்தரம் நடித்தார். ஷிபு என்கிற அந்த கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரத்தைப் பார்த்து வியந்தவர்களில் மோகன்லாலும் ஒருவர்.

also read : பாரம்பரிய உடையில் திருப்பதி சென்ற ஜான்வி கபூர் - வைரலாகும் படங்கள்

மின்னல் முரளியில் குரு சோமசுந்தரத்தின் நடிப்பைப் பார்த்தவர் தான் இயக்கும் பரோஸ் - நிதி காக்கும் பூதம் படத்தில் ஒரு வேடம் தந்திருக்கிறார். இது மோகன்லால் இயக்கும் முதல் படம். அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார். ஜிஜோ புன்னூஸ் எழுதிய நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இதுவொரு பேண்டஸி த்ரில்லர்.

மின்னல் முரளி வெளிவந்த உடனேயே குரு சோமசுந்தரத்துக்கு மலையாளத்தில் அடுத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது தொடரும். திறமையான தமிழ் நடிகர்கள் பலரையும்  மலையாள சினிமா சுவீகரித்துக் கொண்டிருக்கிறது. குரு சோமசுந்தரம் போன்ற நடிகர்களை தமிழ் சினிமா நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Cinema, Malayalam actor

அடுத்த செய்தி