காதலரை கரம்பிடித்த பிக்பாஸ் நடிகைக்கு விருந்து வைத்த கமல்!

சுஜா வருணி - சிவக்குமார் தம்பதிக்கு நடிகர் கமல்ஹாசன் விருந்து கொடுத்துள்ளார்.

news18
Updated: December 5, 2018, 6:21 PM IST
காதலரை கரம்பிடித்த பிக்பாஸ் நடிகைக்கு விருந்து வைத்த கமல்!
கமல்ஹாசன்!
news18
Updated: December 5, 2018, 6:21 PM IST
சுஜா வருணி - சிவக்குமார் தம்பதிக்கு நடிகர் கமல்ஹாசன் விருந்து கொடுத்துள்ளார்.

தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் ஆகிய படங்களில் நடித்த சுஜா வருணி, கடந்த முறை நடந்த பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நிகழ்ச்சியில் இணைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது தந்தையின் மறைவை நினைத்து உருகிய சுஜா வருணிக்கு தான் அப்பா ஸ்தானத்தில் உன்னுடன் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறியிருந்தார் கமல்ஹாசன்.சுஜா வருணியும்  சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமான சிவக்குமாரும் 11 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவருடைய திருமணம் கடந்த நவம்பர் 19-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதற்காக முதல் அழைப்பிதழை நடிகர் கமல்ஹாசனுக்கு சுஜா வருணி வழங்கியிருந்தார். இந்த நிலையில் திருமணம் முடித்த புதுமண தம்பதியான சுஜா வருணி - சிவக்குமாருக்கு நடிகர் கமல்ஹாசன் விருந்தளித்துள்ளார்.அதற்கான புகைப்படங்களை நடிகை ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இயக்குனர் சங்கர் படங்களை வெற்றியடைய செய்த காட்சிகள் - வீடியோ

First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...